இருபதாவது திருத்தமும் ஊடக சுதந்திரமும்

அரசியல் அமைபபிற்கான 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு இப்போது சட்டமாக நடைமுறைக்கு வந்திருக்கின்றது. அந்த திருத்தத்தில் சில பிரிவுகள் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்ததோடு உயர் நீதிமன்றத்தின் இறுதியான தீர்ப்பின் மூலம் அவை ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பாக கவனம் செலுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

 

அரசியல் அமைபபிற்கான 20ஆவது திருத்தம் தொடர்பான சட்ட மூலம் 2020 செப்டம்பர் 02 ஆம் திகதி அரசாங்க வர்த்தமாணியில் பிரசுரமாகின. அந்த சட்டமூலத்திற்கு எதிராக 38 மனுக்கல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. திருத்தத்தில் உள்ளடங்கும் பிரதானமான 26 விடயங்கள் தொடர்பாக முறைப்பாட்டாளர்கள் தத்தமது முறைப்பாடுகளில் கவனம் செலுத்தி இருந்தனர். அந்த 38 மனுக்களையும் பரிசீலனை செய்து பார்த்த உயர் நீதிமன்றத்தின் 05 நீதியரசர்களைக் கொண்ட குழாம் அதன் இறுதிதீர்ப்பை 2020 ஒக்டோபர் 05 ஆம் திகதி அறிவித்தது. உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்திருந்த தீர்ப்பை சபாநாயகர் 2020 ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட போது குழுநிலையில் 50 இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.  2020 ஒக்டோபர் 22 ஆம் திகதி சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் (சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும்) நிறைவேற்றப்பட்டது.

 

அரசியல் அமைப்பிற்கான திருத்தத்திற்கு எதிராக மன்றில் மனு செய்திருந்த மனுதாரர்களுக்கும் எதிர் மனுதாரர்களுக்கும் இரண்டு நியாயங்களை முன்வைப்பதற்கு உயர் நீதிமன்றத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.  20 ஆவது திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதற்கான நியாயமான பதிலை பெற்றுக்கொள்வது எதிர்பார்க்கப்பட்டது.

 

எதிர் மனுதாரர்களால் முன்வைக்கப்பட்ட பிரதானமான இரண்டு தர்கக்ங்களும் வருமாறு : –

  1. 20 ஆவது திருத்தம் மூலம் அரசியல் அமைப்பின் அடிப்படையான அம்சங்களில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படுவதில்லை ஆகையால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவுடன் மாத்திரம் நிறைவேற்றினால் போதுமானதாக அமைவதோடு சர்வஜன வாக்கெடுப்பொன்று (மக்கள் கருத்தறியும்) அவசியமில்லை என்ற தர்க்கம் முன்வைக்கப்பட்டது.
  2. 20 ஆவது திருத்தத்தில் பல விடயங்களை உட்படுத்துவதன் மூலம் அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்களை பிரதிபலிக்கச் செய்வதோடு, அரசியல் அமைப்பிற்கான 19 இற்கு முன்னர் அரசியல் அமைப்பு இருந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதனால் 2/3 பெரும்பான்மை ஆதரவு போதுமானதாக அமைவதோடு சர்வஜன வாக்கெடுப்பொன்று அவசியமில்லை.

பிரீடம் ஹவுஸ் (Freedom House) புலனாய்வு தகவல் அறிக்கைக்கமைய 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகின்ற கடினமான ஏகாதிபத்திய போக்கில்மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக தகவல் அறிவதற்கான சட்டம் மூலம் அரச திணைக்களங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன இயங்க ஆரம்பித்துள்ளமை, வெளிப்படுத்தும் சுதந்திரம், மாற்று கருத்துடைய ஊடகவியலாளர்களுக்கு அரச அச்சுறுத்தல்களில் இருந்து தவிர்ந்து சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் போன்ற பண்புகள் புதிய முன்னேற்றங்களாகும். இந்த நிலைமைகளை ஏற்படுத்துவதில் 19 ஆவது திருத்தம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரீடம் ஹவுஸ் கண்காணிப்பு அறிக்கை குறிப்பிடுகின்றது. ஆனாலும் 20 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள பல விடயங்களின் ஊடாக 19 மூலம் 2 ஜனநாயக மயப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பில் காணப்பட்ட ஜனநாயக விரோத போக்கை வெளிப்படுத்தக் கூடிய பண்புகள் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  நியாய தர்மத்திற்குட்பட ஊடக செயற்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சுபாவத்தை கொண்டிருக்கின்றன.

 

முதலாவதாக கணக்காய்வாளர் மற்றும் கணக்காய்வு சேவைக்கு 20 ஆவது திருத்தத்தில் 153 ஆவது பிரிவு மூலம் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கணக்காய்வாளராக வருவதற்கான அடிப்படை தகைமையான கணக்காய்வாளராக இருக்க வேண்டும் என்ற தகமை இந்த பிரிவின் மூலம் நீக்கப்பட்டிருக்கின்றது. அதன் சாதாரண அர்த்தமாக அமைவது கணக்காய்வாளர் என்ற தகுதி இல்லாத ஒருவரைக் கூட அந்த பதவிக்கு ஜனாதிபதி நியமிக்கலாம் என்பதாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில் அரச கணக்காய்வு தொடர்பாக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சிதைந்து போக இடமுண்டு. அவ்வாறு பிரதமரின் அலுவலகம், ஜனாதிபதியின் அலுவலகம் ஆகியன கணக்காய்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன்படி நாட்டில் அரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு அலுவலகங்களது நிதி செயற்பாடுகளுக்குட்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஊடகங்களாலும் பொது பிரசைகளாலும் முடியாமல் போய்விடும். ஆனாலும் 20 தொடர்பாக வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் குறிப்பிட்ட விடயம் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கணக்காய்வு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்து வருவதால் மேலே சொல்லப்பட்ட இரண்டு அலுவலகங்களதும் கணக்காய்வு தொடர்பான தகவல்களை அறிவதில் எந்தவிதமான தடைகளும் இருக்காது என்பதாகும். அதன்படி கணக்காய்வாளர் மற்றும் கணக்காய்வு ஆணைக்குழு தொடர்பாக எந்தவிதமான திருத்தங்களை செய்தாலும் அதற்கு 2/3 பெரும்பான்மை போதுமானதாகும் என்ற அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

 

ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக அமைவது நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதாகும். 19 மூலம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது. 19 இற்கான திருத்தத்துடன் இணைக்கப்பட்ட 104 (அ) (5) ஆம் பிரிவு 20 மூலம் நீக்கப்படுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. 104 (அ) (5) ஆம் பிரிவின் கீழ் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு மேலதிகமாக அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு ஒழுங்கு விதிகளை விதிக்கும் அதிகாரமும்தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது. என்றாலும் சட்டமா அதிபரால் இந்த பிரிவு நீக்கப்பட்டதாக இருந்தாலும் அரச மற்றும் தனியார் ஊடகங்களுக்கு ஒழுங்கு விதிகளை விதிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருந்த அதிகாரம் நீக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி குறித்த பிரிவை திருத்தம் செய்ய 2/3 பெரும்பான்மை போதுமானதாகும் என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

 

19 மூலம்; அறிமுகம் செய்யப்பட்ட 104 (உ) (ஊ) புதிய பிரிவு 20 மூலம் உட்படுத்தப்பட்டது. தேர்தல் ஒன்று நடத்தப்படும் போது தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைக்காத அரச திணைக்களம், அரச அதிகாரி அல்லது தனியார் நிறுவனத்திற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அதிகாரம் 104 (உ) (ஊ) மூலம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த பிரிவை நீக்குவது தொடாபாக உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயமாக அமைந்தது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதில் செல்வாக்குச் செலுத்துவதால் அது மக்களது இறைமையை பாதிக்கின்றது என்பதாகும். அதனால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாமல் அந்த பிரிவை நீக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

 

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் 05 ஆவது பிரிவு மூலம் 35 ஆவது பிரிவுக்கு திருத்தம் முன்வைக்கப்பட்டிருந்தது.  அதாவது ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக அல்லது தனிப்பட்ட முறையில் முறையில் செய்யப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கு 19 இல் வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பம் ஒரு அடிப்படை உரிமையாகும். இந்த பிரிவு நீக்கம் செய்யப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக இந்த கட்டுரையில் அரசாங்கத்தின் சகல அதிகாரங்களையும் ஜனாதிபதியின் காலடியில் குவித்து வைத்திருக்கின்ற ஒரு அதிகார மூலம் உருவாகும் நிலையை 20 ஏற்படுத்தி இருக்கின்றது என்ற விடயம் சுட்டிக்காட்டப் பட்டதாகும்.

 

அவ்வாறே தகவல் கோருகின்ற போது பொது கூட்டுத்தாபனங்களால் அதற்கு உரிய பதிலளிப்புக்கள் இல்லாத முறையில் (மீறும் போது பொறுப்போ தண்டனையோ இல்லாத) செயற்படும் நிலையை ஏற்படுத்துவதானது ஊடகவியலாளர்களது ஊடக செயற்பாட்டின் (குறிப்பாக மாற்று ஊடக பயன்பாட்டில்) திறமையை பலவீனப்படுத்துவதாக அமையலாம் அதன்படி 35 ஆவது பிரிவானது மீண்டும் 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பின் எல்லை மீறிய அதிகாரத்தை நோக்கி பயணிப்பதாக இருக்கின்றது. இறுதி வழக்கு தீர்ப்பின் போது 35 ஆவது பிரிவை 3 நீக்குவதானது மக்களது சுயாதிபத்தியத்திற்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தவதால் 20 இல் அந்த பிரிவை நீக்க வேண்டுமானால் அதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக மக்களது அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

 

அதன்படி அரசியல் அமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த ஊடக செயற்பாட்டிற்கு சம்பந்தப்பட்டதாக இருந்த வசதிகள் இறுதியான வழக்கு தீர்ப்பின் ஊடாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் ஊடக சுதந்திரத்திற்கு மிகவும் தொலைவில் இருந்தாவது பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அதேபோன்று ஜனநாயக சமூகத்திற்கு பாதிப்பை உண்டுபன்னக் கூடியதான ஏற்பாடுகளை முழுமையாக நீக்குவது தொடர்பாக 19 ஆவது திருத்தம் வழங்கி இருந்த பலமான ஏற்பாடுகளை 20 இல் காணமுடியவில்லை.

Leave a Reply