இலங்கையில் சட்டத்துறை மாணவர்களது இனம் பிரதான காரணமாக ஏன் கருதப்பட வேண்டும்?

2020 ஜூலை 30 ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு இனத்தை மாத்திரம் குறிக்கும் வகையிலான செய்தி விவாதத்திற்குரியதாக மாறி இருக்கின்றது. “2012 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெறும் மாணவர் எண்ணிக்கையில் அசாதாரணமாக உயர்வு” என்ற தலைப்பில் அப் பத்திரிகையின் அச்சு பதிப்பிலும் ஒன்லைன் இணைய பக்கத்திலும் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. ஆனாலும் இணைய பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட தலைப்பு பிரசுரமான பின்னர் மீண்டும் ஒருமுறை “ 2012 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கான மாணவர் அனுமதியில் ஒரு இனத்திற்கான தொகையில் அசாதாரண உயர்வு “ என்ற அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன் பிரசுரமான பிரதியின் முகப்பை(ஸ்கிரீன் சொட்) இங்கு காணலாம்

hhhhhhhhhhhhhh

PRINT EDITION

hhhhhhhhhh3333333333

EDITED WEB ISSUE

இவ்வாறான முறையை பின்பற்றிய ஊடக நடத்தை தேசிய அடிப்படையிலான இன நல்லுறவானது எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி; ஆபத்தை உண்டுபண்ணுவதாகவும்; இருந்து வருகின்றது. அது தொடர்பாக மேலும் கவனம் செலுத்தினால் இவ்வாறான விடயங்கள் பிரசுரிக்கப்படுவதன் நோக்கம் குறித்து பத்திரிகையின்; ஆசிரியர் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும்.

அரச புலனாய்வு சேவையின் (SIS) 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி சட்டக் கல்லூரிக்கான மாணவர் அனுமதி பற்றிய தகவலில் தெரிவிக்கப்பட்டதாக டெய்லிமிரர் பத்திரிகை வெளியிட்ட தகவலில் 2003 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு 203 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 05 முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமே உள்ளடங்கி இருந்ததாகவும் 2012 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 78 ஆக 25.24% என்ற வீதத்தை காட்டும் வகையில் உயர்வடைந்தது என்று குறிப்பிட்டிருந்தது. இந்த தகவலை வெளியிட்ட அரச புலனாய்வுத்துறை எஸ்.டி.ஐ.ஜி நிலந்த ஜயவர்தனாவின் கருத்துப்படி “இந்த எண்ணிக்கை உயர்வானது இலங்கையில் சிறுபான்மை சமூகம் மிக முக்கியமான உயர்பதவிகளை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியே” என்ற அடிப்படையில் புலனாய்வு செய்வதற்கான முயற்சி என்றும் அது தொடர்பாக புலனாய்வு செய்ய உத்தரவிடப்பட வேண்டும் என்று கூறியது.

இந்த அறிக்கையிடலில் இலங்கை பத்திரிகை பேரவையினால் 1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 162/5A ஆம் இலக்க அரசாங்க வர்த்தமாணி அறிவித்தலின் பிரகாரமான ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்கக்கோவையின் சில பிரிவுகள் மீறப்பட்டிருக்கின்றது. இந்த கட்டுரை மூலம் மீறப்பட்டுள்ள பிரிவுகள் தொடர்பாக நாம் ஒவ்வொன்றாக கவனம் செலுத்துவோம்.

ஒழுக்கக்கோவையின் பிரிவு 2. சீ : – ஒவ்வொரு ஊடகவியலாளரும் திட்டமிட்ட அடிப்படையில் திரிபுபடுத்தும் வகையில் அறிக்கையிடுவது அல்லது திட்டமிட்ட அடிப்படையில் தவறிழைப்பதில் இருந்து தவிர்ந்து நடந்துகொள்ள வேண்டும். மாணவர் அனுமதி தொடர்பாக தெரிவிக்கையில் சிறுபான்மை இனத்திற்கான அனுமதி பற்றி குறிப்பிடுகின்ற அதே நேரம் மொத்த அனுமதியானது வித்தியாசமான கண்ணோட்டத்தில் செய்யப்பட்டிருக்கின்றது என்ற விடயத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றது. ஆனால் எழுத்தாளர் இந்த செய்தி வெளியீட்டில் திட்டமிட்ட அடிப்படையில் அதனை தவறவிட்டுள்ளார்.
ஒழுக்கக்கோவையில் பிரிவு 10 குறிப்பிடுகையில் : – ஊடகவியலாளர் அறிக்கையிடும் போது இன அல்லது மத ரீதியான முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அல்லது அதற்கு வழிவகுக்கும் வகையில் அச்சிடுவது அல்லது தகவல் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த பிரசுரத்தில் நாட்டில் இன அடிப்படையிலான அமைதியின்மைக்கு வழிவகுக்கும் வகையில் திட்டமிட்ட அடிப்படையில் தகவலை வெளியிட்டிருப்பதன் மூலம் டெயலிமிரர் பத்திரிகை தெளிவான அடிப்படையில் ஒழுக்கக்கோவையின் அந்த பிரிவை மீறி இருக்கின்றது. குறிப்பாக இந்த செய்தி பிரசுரம் மூலம் ஏற்கனவே சிறுபான்மையினருக்கு பாதிப்பையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகின்ற சிங்கள பௌத்த தேசியவாதிகளை தவறான வழிக்கு இட்டுச் செல்வதாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதை காட்டுகின்றது.

அத்துடன் இந்த செய்தியுடன் சம்பந்தப்பட்டதாக இலங்கை பத்திரிகை ஆசிரியர் சமாஜத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுக்கக்கோவை தொடர்பாகவும் சில விடயங்களை குறிப்பிட வேண்டும். அந்த ஒழுக்கக்கோவையின் பிரிவு 1.4 குறிப்பிடுகையில் பத்திரிகைகளும் ஊடகவியலாளர்களும் பலமான முறையில் சுதந்திரமான அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுவதற்கான சகல சுதந்திரத்தையும் பெற்றுள்ளனர். ஆனாலும் அவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது ஏனையவர்களது கருத்துக்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டியிருப்பதோடு அவை சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று தெரிவிக்கின்றது. அதன்படி பார்க்கும் போது இந்த செய்தியில் அத்தகைய சமூகப் பொறுப்புணர்வை காண முடிவதில்லை என்பதோடு அந்த ஒழுக்கக்கோவையின் குறிப்பிட்ட பிரிவும் மீறப்பட்டிருக்கின்றது.

அந்த ஒழுக்கக்கோவையின் பிரிவு 2.1 : – ஊடகம் எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்திகள் மற்றும் புகைப்படங்களை பிரசுரிக்கின்ற போது சரியான தகவலை திரிபுபடுத்தல் இல்லாமல் வெளியிடுவதற்கு போதுமான கவனம் எடுக்க வேண்டும் என்பதோடு அவதானமாகவும் செயற்பட வேண்டும்.
ஒரு இனம் தொடர்பாக தகவலை வெளியிடும் போது குறிப்பிட்ட செய்தியானது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி கருத்தை உட்படுத்துவதை செய்யவில்லை. அந்த செய்தியானது மொத்தமாக எல்லா இனங்களையும் உள்ளடக்கிய தகவலை வெளிப்படுத்துவதாக இருந்ததோடு குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் போது அந்த இனத்துடன் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்பாக சரியான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

இந்த செய்தியில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது இவ்வாறான பலவீனமான தகவல் வெளிப்படுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது குற்றவாளியாகக் காட்டப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்திடம் பத்திரிகை மன்னிப்பு கோர வேண்டும்.

Leave a Reply