இலங்கை மகளிர் உதை பந்தாட்டத்திற்குப் புத்துயிரளித்தல்

துடுப்பாட்ட விளையாட்டின் மூலம் இலங்கை அதிகம் அறியப்பட்டிருந்தாலும், இந்நாட்டில் ஏனைய விளையாட்டுகளும் அதிக சுறுசுறுப்புடன் விளையாடப்படுகின்றன. இவ்வாறான வெளிப்படையில், மகளிர் தேசிய உதைபந்தாட்ட அணியின் அண்மைய செயற்பாடு எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.  ஒரு அணியாகச் சேர்ந்து ஆடும் பல்வேறு விளையாட்டுகள் பற்றிய கவனம் அதிகமாக ஆண்களின் அணிகள் மீதே குவிந்திருக்கும்போது, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடப்புக் காலத்தில் தங்கள் முயற்சிகளில் மகளிர் அணிமீது கூர்மையான கவனஞ் செலுத்துவது உற்சாகமூட்டுவதாக உள்ளது.

 

புதிதாக ஒரு உணர்வலையை ஏற்படுத்துவதுபோல இந்த அணி ஒரு புதிய பயிற்சியாளரைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதுடன், ஏற்கெனவே புதுமுகங்களுடன் புத்துயிர் பெற்று நாட்டிலே உதை பந்தாட்டம் மீண்டும் ஆரம்பமாகும்பொழுது விளையாடுவதற்கு தயாராகின்றது.

 

புதிதாக ஒரு பயிற்சியாளரின் நியமனத்துடன் எதிர்வரும் போட்டிகளில் விளையாடுவதற்குப் புதுப்  பொலிவுடன் கூடிய அணிபற்றி ஒரு எதிர்பார்ப்பும்; பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.  இலங்கை உதைபந்தாட்ட சம் மேளனத்தின் தலைவர் அனுரா டீ சில்வா அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளிற் பங்குபற்றுவதற்கு மிpகவும் மேம்படுத்தப்பட்ட தேசிய மகளிர் அணி தயாராக உள்ளதென உறுதிப்படுத்தினார்.

 

புதிய பயிற்சியாளரின் உதவியுடன் இப்புதிய பந்தயக்குதிரைகள் தங்களை உறுதியாக நிலைனிறுத்திக் கொள்வர் எனச் சொல்லும் டீ சில்வா “மகளிர் அணிக்கென ஒரு பயிற்சியாளரைத் தேடிக்கொண்டிருக்கிறோம். உதைபந்தாட்டம் மீண்டும் ஆரம்பமான பின்னர் சிறப்புத் தகமைபெற்ற பயிற்சியாளர்கள் பிரதம பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்குத் தகுதி பெற்றிருப்பர். உதைபந்தாட்ட சம்மேளனம் மிக விரைவில் புதிய விளையாட்டு வீராங்கனைகளைத் தேர்ந்தொடுப்பதற்கான போட்டிகளை நடத்தவுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிகள் அண்மைய வருடங்களிற் தங்கள் உச்ச செயற் திறமைகளுடன் செயற்படவில்லை;. 2019ம் ஆண்டில் மட்டும் (பிரதம பயிற்சியாளர் அல்போன்ஸோவினாற் பயிற்றப்பட்ட) மகளிர் அணி எஸ்.ஏ.எப்.எப் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு வெற்றியையாவது பெறத் தவறிவிட்டதுடன் தெற்காசியப் போட்டிகளிலும் இதே தன்மை காணப்பட்டபடியால் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் ஆகிய இரண்டும் வெறுங் கையுடனேயே நாடு திரும்பினர்.  உண்மையைச் சொல்லப்போனால் ஆண்களின் தேசிய அணி பிபாவின் தரப்படுத்தலில் மிகவுந் தாழ்ந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் பெப்ரவரி 2020ல் வெளியிடப்பட்ட உலகத் தரவரிசையில் தற்போது 206ம் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

கீழ் நோக்கிச்செல்லும் இந்தப் போக்கைக் கருத்திலெடுக்கும்பொழுது இந்த ஆண்டு அவர்கள் வெற்றி பெறுவார்களென்ற நம்பிக்கை இருப்பதுடன் மகளிர் அணி மீண்டும் எழுச்சிபெறுவதில் அதிகாரிகள் கவனஞ் செலுத்துவதையும் காண்கின்றபோது உளம் மகிழ்ச்சி அடைகிறது.

 

ORIGINAL ARTICLE:

After resumption: New coach, new faces in Women’s squad

Ceylon Today, April 20th 2020, https://ceylontoday.lk/news/after-resumption-new-coach-new-faces-in-women-s-squad

 

Leave a Reply