உண்மை தன்மையை சரிபார்த்தல்

பகுதி 2: 

படங்கள் மற்றும் இடங்களை சரிபார்த்தல்:

ஊடகவியலாளர்கள் தங்களது விடயங்களுக்கான ஆதாரங்களின் உண்மை தன்மை புள்ளிவிவரங்கள் மற்றும் ஏனைய அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உண்மையானவை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ‘உண்மைச் சரிபார்ப்பு ஆன்லைன் கருவிகளை’ இங்கு தருகிறோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கருவிகள் குறிப்பாக இருப்பிடங்களையும் படங்களின் உண்மைத்தன்மையையும் சரிபார்ப்பதற்காக உதவியை ஊடகவியலாளர்களுக்கு வழங்குகிறது:

இடங்களை சரிபார்த்தல் 

இந்த ஆன்லைன் வரைபடம் உலகின் பல பகுதிகளின் வான்வழி காட்சிகளை உயர் தெளிவுத்திறன் கொண்டதாக நமக்கு வழங்குகிறது. செயற்கைக்கோள் படங்கள் நிலப்பரப்புஇ வானிலைஇ 360 டிகிரி தெரு காட்சிகள் மற்றும் பயனர் புகைப்படங்கள் உள்ளிட்ட கூடுதல் காட்சிகளுடன் உள்ளன.

புவியிட புகைப்படங்களைத் தேடுவதற்கு பயன்படுத்தக்கூடிய நீண்ட காலமாக நிரூபிக்கப்பட்ட புகைப்பட பகிர்வு தளமான இதனை உங்களுக்கு தகவல் கிடைக்கக்கூடிய இடம் தொடர்பான தரவுடன் ஒப்பிட்டு சரிபார்க்க பயன்படுத்தலாம்.

கூகிள் மொழிபெயர்ப்பு இப்போது படங்களை ஸ்கேன் செய்து நேரலையாக பகிரும் வசதியுடன் வருகிறது. வீதி குறிகள் போன்ற இருப்பிடத்தை சரியாகக் கண்டறிவதற்கான துப்பினை இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் பெறமுடியும். 

நாசாவின் புவி ஆய்வகம் என்பது உலகெங்கிலும் உள்ள பட அடிப்படையிலான தரவுகளின் களஞ்சியமாகும். உலக மக்களுடன் தொடர்புடைய தகவல் பெற்றுக் கொள்வதற்கான செயற்கைக்கோள் படங்களை வழங்க இது உருவாக்கப்பட்டது. நீங்கள் அவர்களின் தரவை இலவசமாக அணுகலாம்.

கூகிள் வரைபடங்கள் இந்த கிரவ்ட்-சோர்ஸ் (Crowd-source)  விக்கி பதிப்பானது முக்கிய புள்ளிகள் மற்றும் அணுகும் இடங்களை தகவலுடன் தருகிறது.

இந்த தேடுபொறியானது குறிப்பிட்ட விடயத்துடன் தொடர்புடைய கேள்விகளுக்கு அதன் அறிவுத் தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட விரிவாக்கும் தரவுகளின் தொகுப்பைப் பயன்படுத்தி பதிலளிக்கிறது. வழக்கமான தேடுபொறிகளைப் போலல்லாமல் Wolfram Alpha படங்களுடன் நேரடி உண்மை தகவல்களை உங்களுக்கு வழங்கும்.

VERIFYING IMAGERY

படத்தை சரிபார்த்தல்

ஆன்லைனில் காணப்படும் ஒரு படத்தின் URLஐ நீங்கள் பதிவேற்றும்போது அல்லது உள்ளிடும்போது ஒத்த படங்கள் அல்லது ஒத்த படங்களைப் பதிவேற்றியுள்ள துணை தளங்கள் போன்ற தொடர்புடைய உள்ளடக்கத்தைக் கண்டறிய Google உங்களுக்கு உதவுகிறது.

இந்த கருவி அம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் வீடியோவின் சரியான பதிவேற்ற தேதி மற்றும் பதிவேற்ற நேரத்தைக் காண்பிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக குறிப்பிட்ட படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில் பல சிறு படங்களையும் வழங்கும் கூகிளின் விருப்பு தெரிவையும் உள்ளடக்கியது.

இது ஒரு எளிய கருவியாகும். ஒரு படம் அல்லது வீடியோவின் EXIF தகவலைப் பிரித்தெடுக்க இது பயன்படுகிறது.

இது ஒரு வலையமைப்பு அடிப்படையிலான கருவியாகும். ஒரு படத்தின் சில பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதா என்பதை பகுப்பாய்வு செய்ய இது உதவுகிறது. மாற்றங்கள் செய்யப்பட்ட படத்தின் சரியான பகுதியை சுட்டிக்காட்டுவது போன்ற துல்லியமான  விவரங்களையும் இது வழங்கும்.

இந்த இலவசஇ விண்டோஸ் (App) பயன்பாடாதானது ஒரு படம் திருத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியில் கையாளப்பட்டதா என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. AVI, DNG, PDF, THM ,JPEG போன்ற பல கோப்பு வகைகளைப் படிக்க முடிவதன் மூலம் படபிடிப்பு தேதி கேமரா வகை மற்றும் அதன் அமைப்புகள் போன்ற படத்தின் மெற்றாடேட்டாவை மீட்டெடுக்கிறது.

  • நட்டாலீ சொய்ஸா

 

Leave a Reply