ஊடக பொறுப்புணர்ச்சி போட்டித் தன்மைக்கு அடிமையாகுமா?

ஊடகங்கள் வரிசையில் பத்திரிகையானது வாசகர்களுக்கு அவர்களால் தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாகும். அந்த நிலையை மிகவும் பயனுள்ளதாக முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஊடகவியலாளன் மிகவும் முக்கியமான பங்களிப்பை செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். ஆனாலும் அன்றைய நிலையில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற விடயங்களை அவதானிக்கும் போது அந்த பொறுப்பை ஊடகவியலாளர் சரியான முறையில் நிறைவேற்றி இருக்கின்றானா என்ற சந்தேகத்தை தேதாற்றுவித்திருக்கின்றது.

ஊடக அறிக்கையிடலில் சரியான , நடுநிலைமை , துள்ளியம்  ; நம்பிக்கை   ஆகிய பன்புகளை கட்டியெழுப்புவதற்கு ஊடகவியலாளர்களால் முடியுமாக இருக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் இந்த அடிப்படை பன்புகளை பின்பற்றியதாக செயற்படும் போதே மக்கள் மத்தியில் பொறுப்புணர்வை கடைபிடிக்கக் கூடியதாக ஊடகவிய லாளர்களாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடிகின்றது. அப்போதே சரியான அறிக்கையிடல் மூலம் நாட்டையும் மக்களையம் சுபீட்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியுமாகின்றது. இல்லாவிட்டால் அழிவை ஏற்படுத்தக்கூடிய ஊடக செயற்பாடு மூலம் நாட்டையும் மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளிவிட முடியும்.

இலங்கையில் போதைப்பொருள் தேடுவதை நரியிடம் கோழியை பிடிப்பதற்கு ஒப்படைத்தது போன்றாகும்

2121

(சதி அக அருண : 04.10.2020

இன்று செய்தியை வழங்குவதில் பாரிய போட்டி நிலை காணப்படுகின்றது. பத்திரிகைகள் ஒரு செய்தியை மற்றைய ஊடகம் வாசகருக்கு வழங்குவதற்கு முன்னதாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போட்டி ஏற்பட்டிருக்கின்றது. வாசகர்களும் புதிய தகவல்களை அறிவதற்கு அல்லது புதிய செய்தியை அறிந்து கொள்வதற்காக ஆவலோடு: காத்திருக்கின்றனர். மறுபுரமாக இலத்திரனியல் ஊடகங்களின் ஆக்கிரமிப்பாலும் பத்திரிகைகள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இருந்து வருகின்ற வானொலியும் பின்னர் தொலைக் காட்சி அலைவரிசைகள், தற்போதைய சூழ்நிலையில் இணையத்தள வசதி மற்றும் அதையும் மிஞ்சிய சமூக ஊடக செயற்பாட்டின் வளர்ச்சி என்பனவும் இந்த போட்டி நிலைக்குள் பிரவேசித்திருப்பதால் பத்திரிகைகள் அதன் நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக கடுமையாக பிரயத்தனப்பட வேண்டிய நிலை உருவாகி இருக்கின்றது.

இந்த நிலைமைகளை காரணமாக வைத்து பத்திரிகைகளில் கடமை புரிகன்ற ஊடகவியலாளர்கள் தமது பொறுப்புணர்ச்சியை உதாசீனம் செய்தவர்களாக நடந்து கொள்வதென்பது சர்வசாதாரண விடயமாக மாறி இருக்கின்றது.

உங்களது கைத் தொலைபேசிகள் இந்த மாதத்தில் இருந்து செயலிழப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது  

12324

(சதி அக அருண : 04.10.2020)

போட்டிச் சந்தை ஊடக அறிக்கiயிடல் சூழ்நிலையிலும் கூட வெற்றிகரமான ஊடக செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான ஆற்றல் ஊடகவியலாளர்களிடம் காணப்பட வேண்டும். அவ்வாறே தமது திறமைகளிலான வீழ்ச்சியானது தம்மால் முன்வைக்கப்படுகின்ற அல்லது மக்களுக்கு வழங்குகின்ற தகவலின் தராதரத்திலும் வீழ்சியை ஏற்படுத்துகின்றது என்பதை ஊடகவியலாளன் புரிந்துகொள்ள வேண்டும்.

சட்டமும் ஒழுக்கக்கோவையும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கக்கூடிய இரண்டு ஆயுதங்களாகும். ஆனாலும் இந்த ஆயுதங்களானது இரண்டு பக்கமும் வெட்டக்கூடிய ஆயுதமாகும். அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் ஊடகவியலாளனுக்கு பாதூப்பை வழங்குவதோடு தவறான முறையில் பயன்படுத்துவதால் ஊடகவியலாளன் பலவிதமான நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகின்றது. அதனால் ஊடகவியலாளர்கள் சட்டத்தையும் ஒழுக்கக் கோவையையும் தமது இரண்டு கண்களைப் போன்று பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

செய்தியாளன் தேடிக்கொள்கின்ற செய்தியை எழுதுவதற்கு தயாராவதற்கு முன்னர் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் அல்லது வரையறைகள் பல உளள்ன. சமூகம் ஏற்றுக்கொண்ட ஒழுக்க மான்புகள், உடன்பாடுகள், நிறுவனம், தனி நபர்கள் என்று இருக்கின்றன. அவற்றுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளும் வகையில், நிலைகுலையச் செய்வதாக செய்தியை எழுதுவதை அல்லது தகவல்

வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வரையறைகளுக்குட்பட்ட செய்திகள் அல்லது

தகவல்களை ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொண்டால் இத்தகைய வரையறைகளை தகர்த் தெரியாத

விதமாக அல்லது பாதிப்பை ஏற்படுத்தா விதமாக செய்திகளை எழுதுவதை ஊடகவியலாளர்கள்

கடமையாக் கருத வேண்டும். புலி இறைச்சி ஒரு கிலோ 3500 ரூபா

12345

(சதி அக அருண 04.10.2020)

ஊடகவியலாளர்களிடம் தமது ஊடக செயற்பாட்டிற்கு மேலதிகமாக பொறுப்புணர்வு காணப்பட வேண்டும். தாம் விரும்பும் வகையிலான முடிவுகளை மக்களே எடுக்கும் வகையில் பல்வேறுபட்ட விடயங்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் நடுநிலையான தகவல்களை அல்லது செய்திகளை வெளியிடுவது ஊடகவியலாளர்களது பொறுப்பாகின்றது. ஊடகவியலாளர்கள் இத்தகைய பொறுப்புணர்வை குறுகிய நலன்களுக்காக பொருளாதார நலன்கள் அல்லது இலாபத்திற்காக அல்லது சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தக் கூடாது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற அடிப்படையில் அரசியல் அமைப்பின் மூலம் மக்களது அடிப்படை உரிமையான கருத்துக்களை வெளிப்படுத்தும் மற்றும் தகவல்களை அறியும் சுதந்திரத்திற்கு பாதிப்பை உண்டுபன்னும் விதமாக நடந்துகொள்ள கூடாது. அந்த உரிமையை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். மக்களின் இந்த உரிமையை மீறும் வகையில் நடந்துகொள்பவர்கள் தொடர்பாக ஊடகவியலாளன் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். ஊடகவியலாளன் ஒவ்வொரு குறிக்கோள்கைளயும் பின்னணியாகக் கொண்டு செயற்படும் குழுக்களுக்கு அடிமையாகக் கூடாது. தமது நடுநிலைக்கு அல்லது பக்கசார்பற்ற போக்கிற்கு பாதகம் ஏற்படுத்தும் விடயங்களை வெளிப்படுத்துவதை அல்லது பிரசுரிப்பதை தவிர்க்க வேண்டும். அதன் மூலமே ஊடகத்துறையின் உண்ணத நிலையும் மக்களது தகவல் அறிந்து கொள்ளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

Leave a Reply