ஊழல் இல்லாத வெளிப்படைத் தன்மை கொண்ட அரச சேவையை நோக்கி

அரச சேவைக்குள் வெளிப்படைத் தன்மை என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் கூட தெரியாத சமூகத்தில் அரச சேவையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதற்கு முதலில் செய்ய வேண்டியது ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டியதாகும். அரச சேவைக்குள் ஊழல் ஒழிக்கப்பட்டால் வெளிப்படைத்தன்மை போதுமானதாக வெளிப்படும். ஊழல் என்பதால் பண்பாட்டு ரீதியான பிரச்சினைகள் எழுவதோடு அதனால் அரச சேவைக்கும் ஜனநாயகத்திற்கும் கேடு ஏற்படுவதாக இருக்கின்றது.

உதாரணமாக தற்போதைய கொரொனா தொற்று நோய் பரவி வரும் சூழ்நிலையில் சுகாதார பாதுகாப்பை பெற அல்லது பொலிசாரின் சேவையைப் பெறுவதற்காக இலஞ்சம் அல்லது கொந்தராத்து கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பொதுமக்கள் உள, மானசீக ரீதியான பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

கடந்த கால சமூக அமைப்பிற்குள் அரச சேவையை கௌரவமான ஒரு தொழிலாக கருதி ஈடுபட்டு வந்ததோடு அடிமட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரையில் பொது மக்களது கௌரவத்தை பெற்ற சேவையாகவும் அரச சேவை இருந்தது. இதற்கு காரணம் அப்போதைய அரச சேவையில் நேர்மை, அர்ப்பணிப்பு, கடமை உணர்வு, திறமை மற்றும் ஊழல் அற்ற சேவை என்ற நிலைமைகள் இருந்தன. 1980 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற வேலை நிறுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போனதோடு அதனைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் தங்களது வாக்கு பலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சமூகத்தில் அதிகமானவர்களுக்கு அரசாங்க தொழில்களை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதனால் எல்லாவிதமான துறைகளும் பிரதிபலனாக அரச சேவைக்குள் ஊழல் நுழையலாயிற்று. அன்றிலிருந்து இன்று வரையில் ஊழல் நல்ல முறையில் அரச சேவைக்குள் ஊடுருவி பலமடைந்து வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது.

அரச சேவைக்குள் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் தமக்கு தேவைப்படும் தமக்கென பொருத்தமான தீர்மானங்களை விலைக்கு வாங்கும் அளவிற்கு அந்த சேவை சர்வ சாதாரணமானது என்ற சமூக நிலை மாறி இருப்பதை காணலாம். அதன் காரணமாக அரச கொள்கை தீர்மானங்களில் கூட திரிபுகள் அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மக்களுக்காக சேவை செய்வதற்காக மக்களது வரிப்பணத்தால் நடத்தப்பட்டு வருகின்ற அரச சேவை மக்களுக்கு உரிய சேவையை வழங்குகின்றதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. இவ்வாறான அரச சேவைக்குள் நிகழும் ஊழல் மற்றும் திறன் விருத்தி இல்லாத நிலைமைகள் மக்கள் மத்தியில் தனியார் துறைகள் அல்லது தனியார் மயப்படுத்தல் பற்றிய சிந்தனைப் போக்கு வளர்ச்சியடைய காரணமாக அமைந்திருக்கின்றது. தனியார் துறைக்குள் வெளிப்படைத்தன்மை கொண்டதும், அர்ப்பணிப்பு மற்றும் ஊழல் இல்லாத அடிப்படையில் மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மிகவும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கின்ற காரணத்தால் அத்தகைய மனநிலை வளர்ந்திருக்கின்றது.

அரச சேவையாளர் இவ்வாறான ஊழல் மிக்க செயற்பாட்டிற்குள் நுழைவதற்கு வழிவகுத்த காரணிகள் தொடர்பாக கவனம் செலுத்துகின்ற போது சம்பள முரண்பாடுகள், பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட்டாலும் அவர்களை சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படாமை, அரசியல் தலையீடுகள் மற்றும் நியமனம் செய்யப்பட்ட பதவிக்குரிய வேலை இல்லாதிருத்தல் போன்ற காரணிகள் அரச சேவையாளர் அதிருப்திக்கு உள்ளாவதற்கு வழிவகுத்த காரணிகளாக கூறலாம். அதன் மூலம் வெளிப்படுகின்ற பிரதான விடயமாக அமைவது அரசியல் வாதிகளால் உருவாக்கப்பட்ட இவ்வாறான சூழ்நிலைக்குள் அரச சேவையாளர் பாதிக்கப்பட்ட அல்லது குற்றவாளியாக பார்க்கப்படுகின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது எனலாம்.

குறிப்பிட்ட சொல்லப்பட்ட காரணங்களால் மக்கள் தனியார் துறையை விரும்புவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தினாலும் வளர்ச்சியடையும் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு திறமையும் பலமும் உடைய அரச சேவை அவசியமாகின்றது. ஏனெனில் அனைத்து சேவைகளும் தனியார் மயப்படுத்தப்படுவதால் குறிப்பாக சுகாதாரம், சுகவாழ்வு, ஆரோக்கியம் போன்ற சேவைகள் துறைகளை மக்கள் பெறுவதற்காக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் பொருளாதார மட்டத்தில் பின்னடைவு கண்ட ஏழை மக்கள் மிகவும் கஷ்டமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.

அதனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை கோட்பாடாக அமைவது அரச சேவையின் முக்கியத்துவமும் அவசியமுமாகும். அவ்வாறாயின் அரச சேவைக்குள் சம்பள முரண்பாடுகள் இல்லாமல், தகுதியானவர்களுக்கு தகுதியான பதவிகளை கிடைக்கும் வகையில், ஊழல் இல்லாத வெளிப்படையாக மக்களுக்காக சேவையாற்றக்கூடிய அரச சேவையை கட்டி எழுப்புவதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த பணிக்காக எடுக்க வேண்டிய பிரதான நடவடிக்கையாக அமைவது அரச சேவையை அரசில் தலையீடு இல்லாத சுயாதீன சேவையாக மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறாயின் பெயரளவில் இல்லாமல் உண்மையான யதார்த்த அடிப்படையில் செயலாற்றக்கூடிய அரச சேவை ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டிய தேவை உணரப்படுகின்றது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால் நேர்மை, வெளிப்படைத்தன்மையை பாதுகாக்கக்கூடிய மக்கள் நலனை அடிப்படையாக வைத்து இயங்கக்கூடிய அரச சேவையை நாட்டில் உருவாக்க முடியும்.

 

Leave a Reply