சம்பிரதாய பூர்வமான இரு கட்சிமுறை அதிகார பரிமாற்றம் வீழ்ச்சியடைந்து புதிய மாற்றத்தை கொண்டு வந்த தேர்தல்

குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நாட்டின் ஆட்சியை முன்னெடுப்பதற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அரசியல் அமைப்பின்படி தேர்தல் மூலம் தெரிவாகும் ஆட்சியாளர்கள் 05 வருடங்களுக்கு அதிகாரத்தில் இருக்க முடியும். இந்த பொதுத் தேர்தலில் உயர்பட்ச வெற்றியை பெற்றுக்கொண்ட தாமரை மொட்டு சின்னத்தில் களம் இறங்கிய பொது ஜன பெரமுண கட்சி அரசாங்கம் இப்போது அதன் வேலைத் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றது. நான்கு வருடங்களுக்கு முன்னர் உருவாகியதே பொது ஜன பெரமுண கட்சி ஆகும். அது இப்போது அரசாங்கத்தை அமைத்திருக்கின்றது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட சமகி ஜன பலவேகய முன்னணி பிரதான எதிர்க் கட்சியாகி இருக்கின்றது. சுதந்திரத்தின் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்ட புதிய மாற்றம் எனலாம்.

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளை பரிசீலனை செய்கின்ற போது இந்நாட்டில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் எந்தளவிற்கு பலமடைந்திருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த கட்டுரையானது அதற்கான முயற்சியாகும். அதனால் முதலாவதாக தேர்தல் முடிவு குறித்து எமது கவனத்தை செலுத்துவோம்.

(தேர்தல் முடிவை காட்டும் அட்டவணையை பார்க்கவும்)

 

2020 பொதுத் தேர்தல் முடிவு ஒரே பார்வையில்

அரசியல் கட்சி

 

பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள்

 

வீதம்

 

பெற்றுக்கொண்ட ஆசனங்கள்

 

தேசிய பட்டியல் மூலம்

 

மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண

 

6853690

 

59’09]

 

128

 

17

 

145

 

சமகி ஜன பலவேகய

 

2771980

 

23’90]

 

47

 

07

 

54
இலங்கை தமிழரசுக் கட்சி

 

327168

 

2’82]

 

09

 

01

 

10

 

ஜாதிக ஜன பலவேகய

 

445958

 

3’84]

 

02

 

01 03

 

ஈ.பி.டி.பி

 

61461

 

0’53]

 

02

 

 

02

 

ஐக்கிய  தேசிய கட்சி

 

249435

 

2’15]

 

 

01

 

01

 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி

 

66579

 

0’57]

 

01

 

 

01

 

அபே ஜன பலவேகய

 

67758

 

0’58]

 

 

01

 

01

 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

 

67766

 

0’58]

 

01

 

01

 

02

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

 

67692

 

0’58]

 

01

 

 

01

 

முஸ்லிம் ஜாதிக சங்விதானய

 

55981

 

0’48]

 

01

 

 

01

 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

 

51301

 

0’44]

 

01

 

 

01

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 

43319

 

0’37]

 

01

 

 

01

 

தேசிய காங்கிரஸ்

 

39272

 

0’34]

 

01

 

 

01

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

 

34428

 

0’30]

 

01

 

 

01

 

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள்   –    16263285″

அளிக்கப்பட்ட வாக்குகள்                   –   12343309   75’89]

செல்லுபடியான மொத்த வாக்குகள்        –  11598936   71’32]

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்                 –   744373    4’58]

 

சிங்களவர்கள், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என்ற ஒற்றுமை இல்லாதவர்களாக வெறும் இன அடிப்படையிலான வேறுபாட்டிற்கு அப்பால் இருந்து ஒரே இலங்கையர்கள் என்ற அடிப்படையில் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு இன வேறுபாடு இல்லாத முறையில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நிலை காணப்படுமானால் ஜனநாயகம் என்பது மிகவும்; அழகாகவும் சிறப்பாகவும் அமையலாம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் எமது நாட்டில் தற்போதைய அரசியல் நிலை அப்படியானதல்ல. நாம் விரும்பியோ விரும்பாமலோ இன அடிப்படையிலான கட்சிகள் வளர்ந்துள்ளன. அப்படியான விஷேடமான இன அடிப்படையிலான செயற்பாட்டை கொண்டதாக இல்லாமல் பொதுவான அடிப்படையில் இயங்கும் சில அரசியல் கட்சிகளும் தத்தமது இனங்களை முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபடுவதால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் நடத்தை பற்றிய கவனத்தை விட்டு விட்டு தேர்தலைப் பற்றி கவனம் செலுத்தும் நிலை இல்லை. வெளிப்படையாக தெரிவதற்கு இல்லாவிட்டாலும் எமது தேர்தல் அரசியலில் சாதி முறையும் குறிப்பிடத்தக்க ஸ்தானத்தில் இருந்து வருவதை நாம் மறந்துவிட முடியாது.

மேற்படி அரசியல் கட்சிகளது வெற்றிக்கு போன்றே தோல்விக்கும் சமநிலையான காரணங்கள் உள்ளன. அவற்றின் போக்கை அவதானிக்கும் போது அத்தகைய பலவீனங்கள் அனைத்தும் ஸ்ரீ.ல. பொதுஜன பெரமுண கட்சிக்கு வெற்றிக்கு வழிவகுத்தது எனலாம். அத்தகைய காரணிகளை ஒவ்வெவான்றாக குறிப்பிட முடியும். பொதுஜன பெரமுண உள்ளுராட்சி சபைகள், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றை வெற்றி கொண்டு பலமான நிலையில் இருப்பதும் ஐ.தே.க. உடைந்து பிளவுபட்டமை, பதவியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனம், நல்லாட்சி அரசாங்கத்திடம் நல்ல திட்டங்கள் இருந்ததாயினும் நாட்டிற்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்துவதற்கான ஒரே இணக்கப்பாடு இல்லாதிருந்தமை, நாட்டின் இரண்டு பிரதான நிர்வாகிகளான ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடு, ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், எம்.சீ.சி, உடன்படிக்கை தொடர்பாக எழுந்த கருத்து பரிமாறல்கள், ஊடகங்களின் நடததையும் நிறுவன அடிப்படையிலான ஒத்துழைப்பு என்பன பொதுஜன பெரமுண முன்னணிக்கு சாதகமானதாக அமைந்தது என்ற அடிப்படையில் நீண்ட ஒரு பட்டியலை வெளிப்படுத்தலாம். அந்தவகையில் கள நிலவரங்கள் அனைத்தும் பொதுஜன பெரமுண அணிக்கு சாதகமாக மாறின.

அவ்வாறே ஒரு அரசாங்கம் என்ற முறையில் தீர்மானங்களை எடுக்கும் போது அரசாங்கத்திற்கு குறைந்த மட்டத்தில் ஆதரவை வெளிப்படுத்திய மக்கள் தொடர்பாக காட்டும் ஆர்வமும் ஜனநாயகத்திலும் நாட்டின் எதிர்கால நலனிலும் செல்வாக்குச் செலுத்துவதாக அமைகின்றது. அவர்களுக்கு சந்தேகங்கள் மற்றும் அச்சத்தை எற்படுத்தாத விதமாக நடந்துகொள்ள வேண்டியது அரசாங்கத்தின் மீதுள்ள பொறுப்பாகும்.  மத அல்லது இன அடிப்படையில் செயற்படும் கட்சிகளை மேலும் பலப்படுத்தும் வகையில் திட்டங்களை முன்னெடுக்காது அவர்களது மனதை வென்றெடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கமும் பிரதான அரசியல் கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் எந்த இன வழிமுறையின் அடிப்படையில் செயற்பட்டாலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு ஜனநாயக வழியில் சென்று கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், முன்னணிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பாதுகாப்பது ஜனநாயகத்தை நேசிக்கும் அதில் நம்பிக்கை கொண்ட அனைவரதும் பொறுப்பாகும்.

அதிக பலத்தை கொண்ட அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கும் அதே நேரம் மிகவும் பலவீனமடைந்த எதிர்க்கட்சி ஒன்றிருப்பது ஜனநாயகத்திற்கு நல்ல ஆரோக்கியமான நிலையாக இல்லை. அவ்வாறே இந்தளவிற்கு மிக மோசமான தோல்வியை தழுவியதில் இருந்து எதிர்க்கட்சியும் பாடம் கற்க வேண்டும். குழியில் விழுவது மூலைக்கு நல்லது என்ற அமுத வாக்கொன்றும் இருக்கின்றது. ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சியும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியும் அதனை புரிந்து கொண்டு ஒன்றுபட்டு செயற்படக்கூடிய நிலையை காண முடியவில்லை. தேர்தல் முடிவின் மூலம் ஐ.தே.க. வின் தலைவருக்கும் அக்கட்சிக்கும் மக்கள் வழங்கியுள்ள செய்தி என்ன என்பது மிகவும் தெளிவாக இருக்கின்றது. கட்சிக்குள் அந்த பாடத்தை கற்றுக்கொள்ள முடியாத தலைமைத்துவத்திற்கு தேர்தல் மூலம் கிடைத்த பாடத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாதென்றால் அது கவலை தரும் நிகழ்வாகும். அந்த கட்சி உருவான நாளில் இருந்து தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றை மாத்திரம் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். கட்சி தலைமைத்துவத்திற்கு அது புரிந்திருந்தாலும் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு சற்று தயக்கமாக இருக்கலாம். அவர்கள் அதனை புரியாதவர்கள் போன்று இருந்துகொண்டு செயற்படுவதும் கவலையான நிகழ்வாகும். இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் பிரமாண்டமான இரண்டு மரங்களாக பரந்து விரிந்து காணப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தபோதும் இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ.ல.சுதந்திர கட்சியும் பின்னடைவை கண்டிருக்கின்றன. அந்த கட்சிகள் மூலம் உருவாகிய புதிய அரசியல் முன்னணிகள் இரண்டும் இன்றைய நிலையில் இடங்களை பிடித்துக்கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் முன்னணியும் அதன் வெளிப்படைத் தன்மையை மக்களுக்கு காட்ட வேண்டும். இன்றுள்ள நிலையை விட முன்னேற்றகரமான நிலையை வெளிப்படுத்த வேண்டும். அக்கட்சி உருவாகி ஒரு சில மாதங்களிலேயே 47 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமை ஒரு சிறப்பம்சமாகும்.  ஆனாலும் இந்த வெற்றியில் களிப்படைந்த நிலையில் அனைத்தையும் மறந்து செயற்படுவதானது இந்நாட்டு பிரசைகளின் ஆரோக்கியத்திற்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ நல்லதல்ல. அதுமட்டுமல்லாமல் அவர்கள் கண்டு கொண்டிருக்கின்ற கனவில் இருந்து விடுபட்டவர்களாக பூமியில் காலடி வைத்து நடந்து செல்ல வேண்டும். அத்துடன் சிறுபான்மை கட்சிகள் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கிப் போக விடாது அவர்களும் இணைந்து போகக்கூடிய ஒரு இடம் ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) என்பதை வெளிப்படுத்தக் கூடிய அதன் தலைமைத்துவம் ஏற்படுத்த வேண்டும்.

கடந்த தேர்தலில் தேசிய மட்டத்தில் போட்டியிட்ட அடுத்த பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் தூய்மையான அரசியலை இலக்காகக் கொண்டும்  செயல்பட்டமை மக்களது பாராட்டைப் பெற்றுக்கொண்ட விடயமாகும். அவ்வாறே கடந்த காலங்களில் ஏதாவது இன முரண்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பாக சஹ்ரான் உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளின் போது நாட்டில் சில பிரதேசங்களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்ட போதெல்லாம் இந்த கட்சி தேசிய சமாதானத்திற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டமை பிரதான விடயமாக அமைந்தது. அக்கட்சி அவ்வாறான நிலைமைகளின் போது பங்களிப்புச் செய்து நாட்டில் அமைதியான சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கான பிரயத்தனப்பட்டதை காண முடிந்தது. ஆனாலும் அத்தகைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் அக்கட்சி தொடர்பாக நிலவிய பார்வை மற்றும் ஆதரவு என்பவற்றோடு ஒப்பிடுகையில் தேர்தல் முடிவுகளின்படி அதற்காகவாவது மேலதிகமாக ஆசனங்களை பெற முடியவில்லை. பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை, வாக்குகளின் நிலை என்பவற்றை அவதானிக்கும் போது               அக்கட்சியும் அதன் முன்னோக்கிய நகர்வைப் பற்றிய மீளாய்வொன்றை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. ஒருவிதமாக நாட்டில் நிலவும் கொள்கை அடிப்படையிலான அதிகாரம் ஏன் தேர்தல்களின் போது வாக்குகளாக பரிமாற்றம் அடைவதில்லை என்ற விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி மிக ஆழமாக கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது.

பொதுத் தேர்தல் மூலம் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 744373 ஆக இருப்பதோடு அதன் வீதம் 4’58] ஆகும். இந்த தொகையும் குறிப்பிடத்தக்க அளவாகும். அதற்கான காரணம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிறைவேறாதா அல்லது வெறும் காரணங்களா என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போன்று நடவடிக்கைகளை எடுப்பதும் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரதும் பொறுப்பாகும்.

 

 

 

Leave a Reply