சுகாதார விடயங்களும் வெகுஜன ஊடகங்களின் பொறுப்பும்

கொவிட்-19 வைரஸ் அல்லது கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய சமூகம் அச்சங்களுடனும் அதேவேளை இந்த தொற்றுநோயிலிருந்து ஒருநாள் விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. சில மருத்துவ வல்லுநர்கள் இந்த தொற்றுநோயுடன் உலகம் இன்னும் சில ஆண்டுகள் இவ்வாறே வாழவேண்டி இருக்கும் என்றும் கருதுகின்றனர். கொரோனா தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை இன்றைய மனித சமுதாயத்தில் நிலவும் ஒரே ஒரு விஷயமாக அதை மாற்றி முழுக்கவனத்தையும் அதில் செலுத்துவதா…? அல்லது அதற்கான முயற்சிகள் ஒருபக்கம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, ஏனைய விடயங்களிலும், கஷ்டங்களுக்கு மத்தியிலும், கவனம் செலுத்துவதா என்பது உலகம் முன்னுள்ள தெரிவாகும். இதில் இரண்டாவது தெரிவே சரியானது என்பது தெளிவு.

இதற்கிடையில், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் மற்றும் அங்குள்ள பல்கலைக்கழகங்கள்  கொவிட் 19 வைரஸைத் தோற்கடிக்க பயன்படுத்தக்கூடிய பல தடுப்பூசிகளை வெற்றிகரமாக பரிசோதித்து வருகின்றன என்ற செய்தி உலகிற்கு ஒருவித நிம்மதியையும் நம்பிக்கையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்கு சில காலம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் உலகம் இயங்கிக்கொண்டிருக்கையில், சமூகம் இன்னும் தயக்கத்துடன் மற்றும் அதிகாரப்பூர்வமாகவும் முறைசாரா முறையிலும் பல்வேறு சிகிச்சைகள் குறித்து பல்வேறு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில பரிசோதனைகள் விஞ்ஞான பூர்வமானவை மற்றவை நடைமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய முறைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். ஆயுர்வேத மருத்துவம் அவற்றில் ஒன்று. உடற்திறனை  பராமரிக்கவும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் முறைகள் மற்றும் செயற்பாடுகள் பிரச்சினைகள் அற்றவை என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதேவேளை இதுபோன்ற பல உள்நாட்டு பாரம்பரிய பானங்களை நோக்கி சமூகத்தில் ஒரு ஆர்வப் போக்கு உள்ளது. இவற்றால் சம்பந்தப்பட்ட நபருக்கோ அல்லது சமூகத்துக்கோ தீங்கு ஏற்படப்போவதில்லை. என்றாலும், சிக்கல் என்னவென்றால், கொரோனா தடுப்புக்கான குடி பானம், வைரஸ் தடுப்பு மருந்து, களிம்பு, உள்நாட்டு; கண்டுபிடிப்பு, கை மருத்துவம், மற்றும் கொரோனா வைரசுக்கான ஆயுர்வேத மருத்துவம் போன்ற கட்டுக்கதைகளுக்கு பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் சில இடங்கள் இன்னும் இருப்பதாகத் தெரிகிறது. ஓரளவு நிவாரணத்தை எதிர்பார்க்கும் ஒரு சமூகத்திற்கு இது ஒரு உற்சாகமான சூழ்நிலையாக இருக்கலாம். பல்வேறு சுதேச மருந்துகள் மற்றும் சோதனைகள் என்று பலர் குறிப்பிடப்பட்டாலும், கொவிட் 19 வைரஸ் தடுப்பு குறித்த ஆராய்ச்சியின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட சுதேச மருந்து என்று அதிகாரப்பூர்வமாக எதனையும் பரிந்துரைக்க முடியாது.

இத்தகைய சூழ்நிலையில், மருத்துவப்பொருட்கள் மீதான பொது நம்பிக்கையின் தோற்றம் கொவிட்-19 வைரஸ் தடுப்புக்கு நம்பகமான உத்தரவாதம் இல்லாத முறைகள் மற்றும் வழிமுறைகள், தற்போதைய சூழ்நிலையை கையாள்வதில் தடைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இதுபோன்ற விஷயங்களை கையாள்வதில் அரசு, பாரம்பரிய ஊடகங்கள், நவ ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. ஒர் அரசாங்கம் அத்தகைய விஷயங்களுக்கு அனுசரணை வழங்கும் போது, அது இயல்பாகவே உத்தியோகபூர்வ அந்தஸ்தை அல்லது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கிறது.

சமூக ஊடகங்களில் இத்தகைய போக்குகளை ஒழுங்குபடுத்துவது கடினம் என்றாலும், நிறுவன ரீதியாக இயங்கும் வலையமைப்புகள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் அதை ஒர் ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறை மூலம் நிர்வகிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பது நிதர்சனம். ஒரு சமூகம் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், அனைத்து ஊடகங்களும் சுகாதாரத்துறையுடன் தொடர்புகொண்டு அதன் ஆலோசனைக்கமைய செயல்பட வேண்டும் என்பது பொதுவான ஒருமித்த கருத்தாகும்.

 

 

Leave a Reply