பிரமிட் திட்டங்களில் உங்கள் பணத்தை பணயம் வைக்க வேண்டாம்!

தொற்று நோய் காரணமாக தொழில் மற்றும் வருமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வேளையில் மக்கள் பணம் இன்றி வாழ முடியாது. எனவே அவர்கள் வெவேறு வியாபார நடவடிக்கைகள்;, தெரிவு செய்யப்பட்ட சில உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளையும், முயற்சி செய்து பார்க்கிறார்கள். இருப்பினும் இந்த உயிர் வாழ்க்கைக்கான போராட்ட  விளையாட்டில் நெறிமுறைகளுக்கு அப்பால் சென்று மோசடிகளும் நடைபெறுகின்றது. நம்மில் பெரும்பாலானோர் “விரைவாக பணம் பெறலாம்” எனும் திட்டங்களுக்கு ஏமார்ந்து விழலாம். இவாறான மோசடிகள் உங்கள் சகாக்கள் அல்லது நண்பர்கள் மூலமாக உங்கள் வீட்டுவாசலைத் தேடி வருபவை. எனவே முதல் தோற்றத்திலேயே இவ்வாறான மோசடிகளைக் கண்டு பிடிப்பதென்பது இதன் இயல்புகள் குறித்து ஏற்கனவே விழிப்புணர்வுடன் இருந்தால் மாத்திரமே முடியுமாகின்றது, மக்கள் ஏன் இந்த நிதி மோசடி கடன் நடவடிக்கைகளில் சிக்கி விடுகின்றார்கள்? மக்கள் மத்தியில் தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகள் இல்லாவிட்டால் இது எவ்வாறு மக்களை முட்டாளாக்குகிறது என்பதை பார்ககக்கூடியதாக இருக்கின்றது.

 

பிரமிட் வணிக சந்தைப்படுத்தலானது “பிரமிட் விற்பனை”, “வலைத்தள சந்தைப்படுத்தல்” அல்லது “பரிந்துரை சந்தைப்படுத்தல்” என்றும் அழைக்கப்படுகிறது. இது “உங்கள் பக்கத்துக்கு வீட்டு பிச்சைக்காரன்” என்ற கொள்கையை பின்பற்றுகிறது. 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இழக்க வாங்கிச்சட்டத்தின் பிரிவு 80 (நு) இன் கீழ் பிரமிட் வணிக சந்தைப்படுத்தல் திட்டங்கள் இலங்கையில் சட்டவிரோதமானது. மேலும், பிரமிட் திட்டங்களைப் பயன்படுத்தி நடக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான நிதி பரிவர்த்தனைகள், பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டவிதிகளின் அடிப்படையிலும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலும் ஏற்கனவே கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.  நேரடியாகவோ அல்லது பிரமிட் வணிகம் தொடர்பான பரிந்துரைகளை தனிநபர்களுக்கு வழங்குதல், பிரமிட் வணிகத்திட்டத்தை ஊக்குவிக்க அல்லது சந்தைப்படுத்த பிரமிட் வணிகத்தில் பணத்தை ஒதுக்க மற்றவர்களுக்கு கட்டளையிடல் போன்ற வேறுவழிகளிலோ இத்தகைய சட்டவிரோத வணிகத்தை தொடங்கவோ, தொடரவோ, அல்லது கையாளவோ யாரும் அனுமதிக்கப் படுவதில்லை. பிரமிட் திட்டத்துடன் தொடர்பிருப்பதாக ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால், குற்றவாளி 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார் அல்லது 1 மில்லியன் அபராதம் செலுத்த உத்தரவிடப்படுவார். அல்லது இரண்டையும் செய்ய நேரிடலாம்.

 

 

கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதார துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி. அழுத்கே குறிப்பிடுவது போன்று சட்டவிரோதமானவை என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ள பலபிரமிட் வணிகங்கள் இன்னும் நாட்டினுள் தொடர்ச்சியாக இடம் பெறுகின்றன. அவற்றில் குளோபல் லைஃப்ஸ்டைல் லங்கா, கியூ நெட், ஓரிஃப்ளேம், கோல்டன் கீ, கிராம்ஃப்ரீ போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த சட்டவிரோத மற்றும் ஆக்கிரமிப்பு வணிக நடைமுறையானது ஒரு விற்பனைப் பொருட்களின் தொகுதியை கௌ;வனவு செய்யச் செய்வதற்கு தூண்டுவதன்; மூலம் மக்களை பிரதிநிதிகளாக ஈடுபடுத்துகின்றார்கள் இதில் ஒரு குறிப்பிட்ட சத விகிதத்தை திருப்பித் தருவதாகவும், வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்ததாக பல அங்கத்தவர்களை அறிமுகம் செய்தால் குறுகிய காலத்தில் பல பங்குகளையும், அதிக வெகுமதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஊக்குவிக்கின்றனர். இந்த திட்டத்திற்கு அறிமுகமாகும் புதியவர்கள் மேல்நிலையில் உள்ள முதலீட்டாள ர்களுக்கு மறைமுகமாக பாரியளவில் அசாதாரணமான நன்மைகளை வழங்குகிறார்கள். இறுதியில் இந்த வணிகம் பணத்தை இறைப்பதைத் தவிர்த்து எதையும் விட்டு வைப்பதில்லை. இப்படித்தான் இந்த வணிகத்தின் பரிந்துரை அமைப்பு செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

இத்தகைய மோசடி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களின் பிரதான திட்டமிட்ட இலக்காக இருந்துவருவது குடும்ப சுகாதாரண தாதிமார், இராணுவ த்தினரின் துனைவியினர், குடும்பப் பெண்கள், ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்தி றனாளிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விரைவாக சம்பாதிக்க என்னும் சிறிய அளவிலான சுயதொழில் முயற்சியாhளர்கள் ஆகியோராவர். இலங்கையில் கொவிட்- 19 வைரஸ் தொற்று காலப்பகுதியில் மீண்டும் அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்வதற்காக, கணிசமான ஆற்றலுடன் பிரமிட் திட்டங்கள் தோற்றம் பெற்றன. பணம் சம்பாதிப்பதற்கான ஒருசுலபமான வழியாக இதனை நினைக்கும் முட்டாள்தனமான மக்கள் இன்னுமிருந்தாலும், இலங்கை மத்திய வங்கியானது இந்த மோசடி வலையமைப்பை பற்றிய விழிப்புணர்வு திட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. காரணம் “உங்கள் பக்கத்து வீட்டு யாசகன்;” என்ற முறையில் சம்பாதிக்கும் பிரமிட் திட்டமானது அவர்களின் வாடிக்கையாளர்களை கடனில் தள்ளியுள்ளது.

 

இலங்கை மத்திய வாங்கியின் கூற்றுப் படி, பிரமிட் சந்தைப்படுத்தல் முகவர் ஒருவர் மருத்துவ தயாரிப்புகள் மற்றும் ஒருசில தயாரிப்பு பாகங்கள், தங்க நாணயங்கள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், மின்னியல் உபகரணங்கள் போன்ற சிலவகையான தயாரிப்புக்களையே விற்க பயன்படுத் துகின்றனர். திட்டவட்டமான சந்தை இல்லாத இந்த தயாரிப்புகள் அவசியமானவையாக இருந்தாலும் தமது தனிப்பட்ட வருவாயை துரிதப்படுத்தும் நோக்கத்துடனே மக்கள் இவற்றை  வாங்குகிறார்கள். இத்திட்டமானது வாடிக்கை யாளர்களின் புகார்களை நிராகரிப்பதாக அல்லது உயர்மட்ட முதலீட்டாளர்களை அறிந்து கொள்வதை தவிர்ப்பதற்காக முறையான இலாபங்கள் தொடர்பான எந்த வொரு வரலாற்று பதிவுகளையும் கொண்டிருக்காது. வளர்ந்துவரும் நாடுகளில் வங்கித்துறையில் நுகர்வோர் இவ்வாறு நடந்துகொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்திலுள்ளது. எனினும் இதனை ஏன் இன்னும் ஒழிக்க முடியாது என்ற ஒரு வெற்றிடத்தை நாம் தொடர்ந்தும் காண்கிறோம் என கலாநிதி அழுத்கே கேள்வி எழுப்புகின்றார்.

 

ஊடகப்பயன்பாடு விரல் நுனியில் காணப்படுவதால், சமூக ஊடகங்கள் பிரமிட் வர்த்தகதிட்டங்களை ஊக்குவிபதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றைவிட வாடிக்கையாளருக்கு நிதி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கல்வியறிவு இருந்தால் மாத்திரமே இவை மோசடி வியாபாரம் என்பதை புரிந்துகொண்டு அதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடியும். பிரமிட் திட்டமானது இலங்கையில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு ஓரளவில் தற்போது அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, வருமானப் பிரிவில் நீடிக்கும் ஒரு சர்ச்சையாகும் என கலாநிதி அழுத்கே தெரிவிக்கின்றார்.

 

இலங்கை சமூகத்தின் உட்கட்டமைப்பு அம்சங்கள், பிரமிட் வணிகத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களைப் பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும். மக்கள் தங்களது இந்த பயணத்தில் ஏற்படும் ஆபத்துக்களை சமாளித்து தமது குடும்பங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதற்கான ஏதேனும் ஒரு வழியிலான நிதியறிவை கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை ஒழுங்குபடுத்தவும் செயல்படுத்தவும் வேண்டியவர்கள் இன்னும் கண்ணுக் கெட்டாத தூரத்திலே உள்ளனர். நமது சமூக- பொருளாதார செயற்பாட்டின்; சிக்கல்களை அடையாளம் காண தேவையான நிபுணத்துவம் வாய்நத தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குள் பொருந்தி வாழக்கூடியவர்கள் மாத்திரமே தப்பிப் பிழைக்க முடியும். மீதமுள்ளவர்கள் தமது பணத்தை கல்லறைக்குள் முடக்கியதற்கு சமமே.

Leave a Reply