பெண்களின் உரிமைகளின் வெற்றியும் சமூகஊடகங்களின் பங்கும்

 

“ஒரு அகப்பை அளவு சுதந்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?” என்பது கடந்த காலத்தில் பலருக்கும் ஏற்பட்ட பிரச்சினையாகும். சில ஆண்கள் ஆணவத்துடன் ஆண் என்பவன் மாத்திரமே உயர்ந்த பாலினம் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக ,பழங்கால நடப்பு வழக்கு பெண் உருவங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கொழுத்த பெண், தனக்குள்ளேயே குறைந்த சுய மரியாதையை வளர்த்துக் கொள்கிறாள். சமூகத்தை பொதுவாக பார்க்கும் பொழுது, தனது தனிப்பட்ட உரிமைகளைப் புரிந்து கொள்ளாமல் செயல்படும் அவளது போக்கு புரிந்து கொள்ளத்தக்கது. புதிய உலகமயமாக்கலின் விளைவாக, பெண்களைப் பற்றிய பாரம்பரிய சித்தாந்தங்களை மாற்றும் பன்முக சிந்தனையின் வேர்கள் நிராகரிக்கப் படுகின்ற உலகில் தாராளமயம் மிகவும் பழமைவாதமாகவே காணப்படும்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பிரகடனத்தின் விரிவாக்கமாக, 1976 ஆம் ஆண்டு முதல் 1985 ஆண்டுவரை பெண்கள் மற்றும் அவர்களது உரிமைகள் பற்றிய கருத்தை மேலும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தின் முதல் பெண்மணி என்று அழைக்கப்படும் ஹிலாரி கிளிண்டன், 1995 செப்டம்பரில் பீஜிங்கில் நடந்த ஒரு ஆராய்ச்சி மாநாட்டில் “மனிதஉரிமைகள் எனப்படுவது பெண்களின் உரிமைகள்”என்றும்  “கல்வி, அரசியல், பொருளாதார மற்றும் சமூகரீதியாக வேறுபட்டிருந்தாலும், எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றி இந்த ஜனநாயக உரிமைகளை பெண்கள் அனுபவிக்க சுதந்திரம் உள்ளது” எனவும் கூறினார்.

இன்று பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் பல்வேறு அரசாங்க, சிவில் சமூக அமைப்புகளும் எவ்வாறு முன்னிலை வகிக்கின்றன என்பதையும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக பெண்களின் அதிகாரம், கல்வி, சுகாதார அச்சுறுத்தல்கள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றின் பின்னணியில், சமூகத்தின் பல்வேறு நிலைகளை குறிவைத்து பொது இடங்களில் விவாதிக்கப்படுகின்றது சமூக ஊடக தளத்தில் பெண்கள் எவ்வாறு மனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்பதையும் காணலாம். சிலர் பலவிதமான சமூக ஊடக தளங்களை பயன்படுத்துகின்ற அதேவேளை சிலநேரங்களில் வேடிக்கையான முகம் மற்றும் கடுமையான சொற்கள், சொற்றொடர்களைக் கொண்டு, ஒரு பாடலில் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது இசை, காட்சிகள் மற்றும் மெல்லிசைகளின் மூலம் பெண்களைக் சமூக ஊடகங்களில் இலக்காகக் கொள்கின்றனர்.

 

பெண் உரிமையின் கேள்வி பற்றிய உரையாடலின் தாக்கம் மற்றும் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் போக்கு குறித்து உளவியலாளர் திருமதி சமிதா எதுல்தொலராச்சி இடம் வினவிய போது “கருத்தாடல்களின் சூழல் பெண்களின் அடையாளப் படுத்தலில் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது” என்று கூறினார். மேலும் பெண்கள் தங்கள் சொந்த அடையாளத்திற்கான சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தின் சம நிலையை சீர்குலைக்க ஒரு முக்கிய காரணியாகும் என்று அவர் நம்புவதாகவும் குறிப்பிட்டார். ஒரு பெண்ணை தெய்வமாக்குவதற்கான இலக்கிய மற்றும் மத சித்தாந்ங்களும் அதேபோல் ஒரு பெண்ணை விபச்சாரியாக மாற்றுவதற்கான கற்பித்தல் சிந்தனைகளும் சமூகத்தில் பெண்ணியத்தை தெளிவற்ற முறையில் காட்சிப்படுத்துகின்றன.  இதற்கு நேர் மாறாக உருவாகும் பெண்ணிய சொற் பொழிவுகள் இந்த சிந்தனை தடுமாற்றத்தை பாலின பிரச்சினையாக சுருக்கிவிட்டது. திருமதி எத்துல் தொலராச்சியின் கருத்துப்படி, “பெண்கள் ஆண்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியவை எதுவுமில்லை. மாறாக பூமியில் வாழத் தெரிந்த ஒரு பெண்ணின் அம்சங்கங்கள், சமூகத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட பெண்ணிய கருத்துக்களும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப் பட்டவேண்டும். அதோடு இது மீண்டும் கட்டமைக்கப்பட்ட வேண்டிய புதுவித கலந்துரையாடல்கள் ஆகும். பெண்கள் இவ்வுலகிற்கு கொண்டுவந்த, இன்னும் தமக்குள் வைத்திருக்கும் குணங்களை நாங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.” இந்த குணங்கள் ஒன்று உயிரியல் ரீதியாக ஆண்மையை மீறுவதாகவோ அல்லது சமூகத்தால் அங்கீகரிகக்ப்பட்டுள்ள பெண்ணிய சிந்தனையை மீறுகின்றதாகவோ அமைந்துள்ளது. “தாய்மை மூலம் இந்த குணங்கள் தோன்றுவது, இது தற்போதைய நிலையில் பயனற்றதாகி விட்டது, மேலும் சமூக வன்முறை அதிகரித்தல், ஒட்டு மொத்த மக்களின் மன நலம் மோசமடைதல், குடும்ப நிறுவனங்களின் முறிவு மற்றும் நிர்வாகத்தை குறைவாக மதிப்பிடுவதற்கு உட்படுத்துதல் போன்ற பல காரணிகளுக்கு உரிமை சொற் பொழிவு பங்களித்தது.” எனஅவர் மேலும் கூறினார்.

 

குழந்தைகளின் அடையாளங்களை அவர்களின் பாலினத்தின் அடிப்படையில் பிரிப்பதும், அவர்களின் வாழ்க்கையின் முடிவுகளை பாலினத்தின் அடிப்படையில் பிரிப்பதும், பாலினத்தை விட தாழ்வு மனப்பான்மை அல்லது உயர்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கும். ஆனால் உரிமை தொடர்பான கருத்து வெளிப்பாட்டில் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சிந்தனைப் பாதை என்ன வென்றால் அவள் ஆணுக்கு நிகராக மதிகக்ப்பட வேண்டும் என்பதாகும். உலகம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதத்தில் இதைக் காணலாம். “ஊடகங்களில் பெண்ணை இழிவுபடுத்துவதே அவர் ஆண்களின் உலகில் வெறுக்கப் படுவதற்கான முக்கியகாரணம், மேலும் ஆண்களின் இருப்புக்கு ஒருவ லுவான பெண்ணின் பங்களிப்பு தெளிவாக தேவைப்படுகிறது, மேலும் ஒரு பெண்ணின் அடையாளம் தொடர்பான நெருக்கடி ஆண்களது ஒரு அடையாளத்திலும் நெருக்கடியைக் ஏற்படுத்தவதாக அமைகின்றது. பெண்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணியாகும்” என திருமதி எத்துல்தொலராச்சி குறிப்பிட்டார்.

 

சமூக ஊடகங்களில் பெண்களை மையமாகக் கொண்ட, பெண்களே நடத்தும் நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். ஏனெனில் தற்போது இளம் பெண் சமூக ஆர்வலர்கள்  ஊடகங்களில் ஈடுபடுவதற்கான போக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களிலும், சமூகக் குழுக்களிலும் கவனத்தைப் பெறுவதற்கான திறனை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர், மேலும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை உருவாக்கும் செல்வாக்குள்ள குழுக்களாக அவர்கள் செயல்படுகிறார்கள்.

 

உதாரணமாக

1.ஹேஸ்டேக் பிரச்சாரம் – அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உருவாக்க பெண்களைப் பயன்படுத்துதல்

  • Bring Back OurGirls  – இலட்சக்கணக்கிலான பதிவுகள்
  • HeforShe – 120 கோடி மக்கள்

 

  1. 2010 ஆம் ஆண்டு எகிப்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிராக அனுப்பப்படுகின்ற அநாமதேய பாலியல் தகவல்களை அடையாளம் காண பயன்படுத்தப்பட்ட “ஹரஸ் வரைபடம்”, வழிமுறை

 

  1. 2012 இல் கூட்டு கற்பழிப்பு சம்பவத்தின் போது இந்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவும் செல்வாக்கு செலுத்தவும் மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அணிதிரண்டனர். (Delhi Gang Rape)

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பலபெண்கள் சமூகஊடகங்களையும் புதிய ஊடகதளங்களையும் சரியாக பயன்படுத்தக்கூடாது என்ற அமைதியான கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்.

 

ஒட்டுமொத்தமாக, இந்தியா, துருக்கி போன்ற நாடுகளில், பெண்களுக்கான கொள்கைகளை அமுல்படுத்தும் பணியில் பெண்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்த தற்போது ஒரு நுட்பமான முயற்சி இருப்பதாக தெரிகிறது. (ICRW, 2010) இருப்பினும், இலங்கையின் நிலைமை மிகவும் மட்டுப் படுத்தப்பட்ட இடத்திலிருப்பதைக் காணலாம், அது இன்னும் பாழடைந்த நிலையில் இயங்குகிறது.

 

பெண்களின் எதிர்மறையான அணுகுமுறைகளை அகற்றி, முடிவெடுக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்துவதும், அவர்களை அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்வதும், ஊடகங்கள் மற்றும் தற்போதைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பெண்களை மையமாகக் கொண்ட பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துவதும்  உதாரணமாக, சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களைத் தொடங்க பெண்களை ஊக்குவித்தல், அடையாள முறைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களின் உரிமைகளுக்கான சமூக ஊடக கண்காணிப்பு தாக்கங்களை அடையாளம் காண ஊக்குவித்தல், இலக்கு குழுக்களை அடையாளம் காண அவர்களை ஊக்குவித்தல் மற்றும் ஒரு வலுவான செய்தியை சமூகமயமாக்க தேவையான பின்னணியை உருவாக்குதல் போன்றவை சிறந்த தீர்வு வழிமுறைகளாகும்.

(www.Genderindex.org)

 

பெண்கள் உரிமைகளை இலக்காகக் கொண்ட பங்கேற்பு, தலைமை மற்றும் முடி வெடுப்பது போன்ற செயல்களின் மூலம் பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தனது உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான பின்னணியை உருவாக்க விரும்புவதை அவர் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற நபர்களின் பங்களிப்புடன் சமூகத்தின் அடி மட்டத்தில் இருக்கக்கூடிய பெண்களையும் பயன்படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நிகழ்ச்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக உருவாக்கப் படவேண்டும். சமூகத்தில் மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் இருக்கும் உறவுகளை வலுப்படுத்த பெண்கள் எப்போதும் ஒரு சிறப்பு நபராக பயன்படுத்தப் படவேண்டும். அத் தொடர்புகளின் உலகளாவிய வலையமைப்பை உருவாக்குவதும் கட்டாயமாகும். ஒரு சிறிய சமுதாயப் பிரச்சினையை உலகளாவிய பிரச்சினையாக மாற்றுவதற்காக, கலாச்சார நோக்குடைய பார்வையாளர்களுக்கு சமூக ஊடக தகவல் பரிமாறற் வழிமுறை ஊடாக கருத்துக்களைப் பரப்புவது பயனுள்ளதாக அமைகின்றது. இதனால் சமூகத்திடையில் கலாச்சார கூறுகள் மூலம் தொடர்பு கொள்ளமுடியும். சமூக ஊடக செயற்பாட்டில் அதற்கான இடத்தை விரிவுபடுத்துவதும் காலத்தின் தேவையாகும்.

Leave a Reply