மக்களின் சக்தி சிதைக்கப்படக்கூடாது

ஐக்கிய மக்கள் சக்தி  (எஸ்.ஜே.பி) ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு புதிய அரசியல் கட்சி ஆகும். மூன்று மத்திய இன சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை இக்கட்சி நிறுத்தியது, அதாவது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் வேட்பாளர்களை நிலை நிறுத்திய கட்சி ஆகும். இருந்தாலும் அவர்களின் பரிந்துரைகள் இன ரீதியான மக்கள் தொகையைப் பொறுத்தவரையில் விகிதாசாரத்தில் வேறுபட்டவையாக காணப்பட்டு இருந்தது. மற்றைய கட்சிகளும் பல்வேறு சமூகங்களின் வேட்பாளர்களை தங்கள் வேட்பு பட்டியலில் பட்டியலிட்டிருந்தன. எவ்வாறாயினும் தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே, இந்த நாட்டில் சிங்களவர்களின் இடத்தினை அழிக்க ஏங்குகிற தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் கூட்டாக இந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காணப்படுகின்றது என்ற கருத்தை சமூக ஊடகங்கள் பரப்பின. இந்த அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிங்களவர்களை அவை வலியுறுத்தின, ஏனெனில் அவர்களுக்கு வாக்களிப்பது தேசத்துரோகம் என்ற கருத்தும் பரப்பப்பட்டது. சிறுபான்மை சமூக பிரதிநிதிகளின் ஆதரவு இல்லாமல் ஒரு அரசாங்கத்தை அமைத்தல் என்ற  வலுவான கருத்து தேர்தல் பிரச்சாரத்தின் போது சிங்கள பெரும்பான்மை கட்சிகளினால் முன்வைக்கப்பட்டது.

aaaaaaaaaa                                bbbbbbbbbbb

படம் 1                                                                           படம் 2

எவ்வாறாயினும்  தீவிரவாதத்தைத் தூண்டும் நாகரிகமற்ற தன்மைக்கு நியாயப்படுத்தும் எந்த காரணங்களும் இல்லை. எந்தவொரு சமூகமும் இத்தகைய செயல்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை, மேலும் இவ்வாறான செயலாலும் எதிராக மக்கள் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். எவ்வாறாயினும், ஒரு நபரை ஒரு அடிப்படைவாத அடிப்படையில் தாக்கும் செயலாக காணப்படும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அதேபோல், ஒரு சமூகங்களுக்கு எதிராக ‘ஹம்பயா, தம்பியா, தேமலா’ போன்ற கேவலமான சொற்களைப் பயன்படுத்துவதும் ஆபத்தானது. ஒற்றுமையாக செயல்படக்கூடிய ஆளுமைகளை முன்னிலைப்படுத்துவதற்கு  பதிலாக ஒரே சிங்கள அரசாங்கத்தின் மீது தவறான கருத்துக்களை பரப்புவது நியாயமற்றதும் மற்றும் ஆபத்தானதும் ஆகும்.

 cccccccc

                        படம் 3

இந்த நிலத்தில் பிறந்து வளர்ந்த மற்றும் பெரும்பான்மை சமூகத்திலிருந்து இனம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றால் மட்டுமே வேறுபடும் ஒரு சமூகம் அரசின் ஆளுகையிலிருந்து அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடுவது ஒரு தீவிரமான விடயமாகும்.

இந்தத் தீவில் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களின் நீண்டகால இருப்பு வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு விடயம் ஆகும். சிறுபான்மை சமூகத்தின் இருப்பு வரலாற்று ரீதியாக இல்லாவிட்டாலும், இலங்கையின் எந்தவொரு குடிமகனுக்கும் நாட்டின் சட்டத்தின் கீழ் அனைத்து குடியுரிமைளும் உள்ளன, அதை அவர்களுக்கு இல்லாமல் செய்ய முடியாது.

பேஸ்புக் பக்கங்கள் மற்றும் சுயவிவரங்களில் காணப்படும் ஐக்கிய மக்களின் சக்தி என்று பொருள்படும் எஸ்.ஜே.பியின் பெயர் முஸ்லீம் மக்கள் சக்தியாக மாற்றப்படும்  என்ற கருத்தை  சமூக ஊடகங்கள் ஊக்குவித்தன, ஏனெனில் ‘ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வென்ற 54 இடங்களில் 25 முஸ்லிம்களுக்கு சொந்தமானது’. இன்னும் சிலர் ‘எஸ்.ஜே.பியின் மூன்றில் ஒரு பங்கு தமிழ் மற்றும் முஸ்லிம் எம்.பி.க்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது’ என்றும் கூறினர்.

 ddddd                                             eeeeee

படம் 4                                                                                                            படம் 5

எந்தவொரு மிதமான நபரும் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு காரணிகள் உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாட்டின் மக்களையே நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மக்கள் அவர்களை இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கீகரிக்க வேண்டும், மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பும் உரிய விடாமுயற்சியுடன் செயல்படுத்தப்படுகின்றது. (அரசியல் கட்சிகள் இன ரீதியான அல்லது மத ரீதியான மையமாக இல்லை என்பது ஒரு முன்நிபந்தனை என்று நான் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.) ஒரு தேர்தலில் அளிக்கப்பட்ட  வாக்குகள், அளிக்கப்படாத வாக்குகள், செல்லுபடியான வாக்குகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் என்பவற்றில்  சிங்கள, தமிழ் அல்லது முஸ்லீம் வாக்குகளின் மதிப்பீடு இருக்கக்கூடாது. மக்களின் சக்தி என்பது நாட்டு பிரஜைகளின் சக்தி, அது சிங்களம், தமிழ் அல்லது முஸ்லீம் சக்தி அல்ல. இந்த புரிதல்தான் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண வழி வகுக்கும் ஒன்றாகும்.

எவ்வாறாயினும், இலங்கையின் அரசியல், இன மற்றும் மத ரீதியான மையமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், இலங்கை அரசியலின் நுண் அரசியலில் காணப்படும் கல்வியறிவின் நிலை காரணமாக உகந்த தீர்வு ஒன்றிற்கு பதிலாக இடைக்கால தீர்வை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தாங்கள் என்று கூறும் இன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை ஒப்புக்கொள்வதற்கான அரசியல் ஒழுக்கத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

இருப்பினும், இலங்கையில் தற்போதைய அரசியல் கலாச்சாரம் எதிர்பார்த்ததை  விட மிக மோசமான நிலையிலேயே காணப்படுவது வேதனைக்குரியது ஆகும்.

இந்த அறிக்கைகள் குறித்து சாதாரண மக்களின் கருத்தை ஆராயும்போது, சூழலின் பேரழிவு தரும் சமூக தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். பொது உணர்வுகள் இனவாதம் மற்றும் தீவிரவாத கருத்துக்களை நோக்கியவையாக இவைகள் உள்ளன.

மாவட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு ஒதுக்கப்படும் ஆசன எண்ணிக்கைகள் என்ற கருத்தியல் வாதமும் இந்த குழப்ப நிலை உருவாக்கத்துக்கு மிக முக்கிய காரணியாகக் காணப்படுகிறது. மொத்தமாகக் காணப்படும் 225 பாராளுமன்ற உறுப்பினர் தொகையில் 29 பேர் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றம் செல்ல, எஞ்சிய 196 உறுப்பினர்களும் மாவட்டங்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சிக்கு அல்லது குழுவுக்கு அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றனர். ஒரு கட்சி சில மாலட்டங்களில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப் பெறின் அக்கட்சியே முழு நாட்டிலும் போட்டியிட்ட கட்சியை விட அதிகளவான ஆசனங்களைப் பெறுகிறது. உதாரணத்துக்குக் குறிப்பிடுவதாயின், தேசிய மக்கள் சக்தி முழு நாட்டிலும் போட்டியிட்டு மூன்றே மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது, அதாவது 3.84 வீதமான வாக்குகளையே பெற்றது. அதேநேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐந்து மாவட்டங்களில் மட்டுமே போட்டியிட்டு 2.82 வீதமான வாக்குகளுடன் ஒன்பது பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இது தற்போது காணப்படும் தேர்தல் முறையின் முடிவு ஆகும். எனவே இதை தீங்கிழைக்கும் வகையில் குறைத்து மதிப்பிடல் ஆகாது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

முதலாவதாக நாம், பன்முகக் கலாசாரத்தை மதிப்பளிக்கும், அதாவது சிங்கள, தமிழ், முஸ்லிம் (இந்த நடவடிக்கைகள் மொழிகள், கலாசாரம் அல்லது மதத்தினை அழிக்கும் ஒன்றாக அமையக் கூடாது) இலங்கையின் அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். மக்கள் ஒருவருக்கு ஆதரவளிக்கும் போது அவர்களது வகிபாகத்தைப் புரிந்து, அரசியல் செயன்முறையில் இலங்கைப் பிரஜை என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும்.

இனவாதமும், மதவாதமும் இந்த நாட்டில் காணப்படும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகளினால் அரசியல் இலாபத்துக்காக விதைக்கப்பட்ட ஒரு விடயம் ஆகும். இவ்வகையான சிந்தனைகளுக்கு சமூக ஊடகங்களும் இன்னும் நீர்ப்பாய்ச்சும் நிலையும் காணப்படுகிறது.

இந்தப் பின்னடைவில், ஐக்கிய மக்கள் சக்தி தாம் ஒரு தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி என்று முத்திரையைக் குத்தினாலும், நீதிக்கு மதிப்பளிக்கும் சரியான சிந்தனையை மதிக்கும் சமூகம் உண்மையில் சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறனைக் கொண்டிராத இந்தக் கடினவாதிகளை நிராகரிக்க வேண்டும். சரியான அரசியல் முறைமைக்கு எதிராக மக்களை அவர்கள் தூண்டுகின்றனர்.

எனவே நாம் எப்போதும் நீதி, சமத்துவம் மற்றும் நியாயத்தை நோக்கிய எமது மனித பண்புகளை மதிப்பளிக்கும் வழி பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.

Leave a Reply