வெறுக்கத்தக்க பேச்சுடன் வங்கியில் இடம்பெற்ற ஒரு கசப்பான சம்பவம்

இலங்கையில் பிற சமூகத்தவர்கள் தொடர்பான வெறுக்கத்தக்க பேச்சு பரவலாக காணப்படுகின்றது குறிப்பாக அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களின் கருத்தியல் தாக்கங்கள் காரணமாக இந்நிலை காணப்படுகிறது. ஜூலை 02, 2020 அன்று சம்பத் வங்கிக் கிளையில் பெயர் அறியப்படாத ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட சம்பவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். சமூக ஊடகங்களில் வைரலாகிய வீடியோ ஒன்றில், ஹிஜாப் அணிந்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணை குறித்த வங்கியின் பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதிக்க மறுத்திருந்தார். அந்தப் பெண்ணின் கணவர் ஒரு வீடியோவைப் பதிவு செய்திருந்தார், அதில் வங்கி பாதுகாப்பு ஊழியர்கள் தனது மனைவியிடம் வங்கி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு தலையை மூடி இருந்த புர்காவை அகற்றுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

 
ஹிஜாப் என்பது முஸ்லீம் பெண்களின் ஒரு பாரம்பரிய உடை ஆகும். இது புர்கா அல்லது நிகாப் போன்று முகத்தை மறைக்கும் ஒரு உடை அல்ல. இருப்பினும், சம்பத் வங்கியின் செய்திக்குறிப்பில், ஒரு பெண் புர்கா அணிந்து வங்கிக்கு வந்துள்ளார், இது அடையாளம் காண்பதற்கான நிறுவன விதிமுறைகளை மீறிய ஒரு செயல் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, அந்தப் பெண் ஒரு நியமமான முகமூடியை அணியாததால் வங்கி வளாகத்திற்குள் நுழைய அவரை அனுமதிக்கப்படவில்லை. வீடியோவைப் பார்க்கும் போது, அவள் ஒரு நிகாப் அணிந்திருந்தாள் என்பதையும், வழக்கமான முகத்தை மூடும் பகுதிக்கு பதிலாக அவர் அணிந்திருந்த உடையின் முகத்தினை மூடும் பகுதியினை பயன்படுத்தினாள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். இலங்கையில் புர்கா அல்லது நிகாப் சட்டவிரோதமானது அல்ல. இருப்பினும், அந்தப் பெண் சமூக சுகாதாரத்துக்கு ஆபத்தினை ஏற்படுத்தியிருக்கிறார், ஏனெனில் அவரது முகமூடி ஒரு தரமான முகமூடி அல்ல.

 
சமூக ஊடகங்களில் சிங்கள மற்றும் முஸ்லீம் இனக்குழுக்கள் இந்தச் சம்பவத்தை ஒரு சிங்கள – முஸ்லிம் மோதலாக எடுத்துக்காட்டியிருந்தன. சம்பத் வங்கியை புறக்கணிக்குமாறு முஸ்லிம் குழுக்கள் முஸ்லிம் சமூகத்தை வலியுறுத்தியிருந்தன. சம்பத் வங்கியின் பாஸ்புக்குகளை எறியும் புகைப்படங்கள் மற்றும் சம்பத் வங்கி காசோலைகளை ஏற்காத அறிவிப்புகளைக் காட்டும் வர்த்தகர்கள் என சம்பத் வங்கிக்கு எதிரான பல விடயங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. சம்பத் வங்கி ஒரு சிங்கள இன வங்கி என்று சிங்கள குழுக்கள் பதிவுகளை வெளியிட்டன, அவை முஸ்லிம்களின் கோபத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பதிவுகளும் அதிகம் பரிமாறப்பட்டன. சில சமூக ஊடக பதிவுகளின் சாராம்சத்தினை பின்வருமாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். சம்பத் வங்கியில் குழப்பம் விளைவித்த முஸ்லிம்கள் சிங்களவர்களை அவமதிக்கின்றனர். சம்பத் வங்கியை தரிசித்த சஹ்ரானின் கும்பல் இது. மதுமாதவ சண்டையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளார்.

 

1 2

444 555

5 6

இந்த வெறுக்கத்தக்க பேச்சுப் பதிவுகள் குறித்த சமூக ஊடக நிர்வாகிகளால் அவர்களை கவர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளவை என்பதை சமூக ஊடக பயனர்களில் பலர் புரிந்து கொள்ளவில்லை. பிரியான் மேனிக் போன்ற வர்த்தகர்களும், மதுமாதவ அரவிந்த போன்ற அரசியல்வாதிகளும் இந்த வாய்ப்பை இனப்பிரச்சினை தோற்றுவிக்கும் ஒரு பிரச்சினையாக மாற்ற முயன்றனர்.
பலர் உண்மையை விசாரிக்கவும் மற்ற சமூகங்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சில் ஈடுபடும் நபர்களை இனங்காணவும் முயற்சிக்கவில்லை. இது சட்டவிரோதமான ஒரு செயல் மற்றும் இதற்காக தண்டனையும் வழங்க முடியும்;. இந்த வகையான செயல்களால் இலங்கை போன்ற பன்முக கலாச்சார சமுதாயத்தில் வாழும் பல மதங்களையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்களின் மத ரீதியான சுதந்திரம் மீறப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பு இந்த சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயம் மனித உரிமைகளை வலுப்படுத்தும் 10, 11, 12, 13 மற்றும் 14 போன்ற சரத்துக்களையும் கொண்டு காணப்படுகிறது.

 

அரசியலமைப்பின் 10 வது சரத்தின்படி, “ஒவ்வொரு நபருக்கும் சிந்தனை செய்யும், மனசாட்சியை பின்பற்றும் மற்றும் மதம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும் சுதந்திரம் உண்டு, அதில் ஒருவர் தனது மதத்தை பின்பற்ற அல்லது வேறு ஒரு மதத்தினை பின்பற்ற அவருக்கு சுதந்திரம் உண்டு.

 
அரசியலமைப்பின் 12 வது சரத்தின்படி, அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள் ஆவர். சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு தகுதியுடையவர்கள் மற்றும் இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனும் பாகுபாடு காட்டப்பட மாட்டார்கள். அவர்களது பிறப்பின் அடிப்படையிலும் அவர்கள் பாகுபாடு காட்டப்பட மாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
அரசியலமைப்பின் 14 வது சரத்து ஒவ்வொரு குடிமகனுக்கும் (a) வெளியீடு உட்பட பேச்சு மற்றும் (e) கருத்து சுதந்திரத்திற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது . (f) தன்னுடைய கலாச்சாரத்தை அனுபவிக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் பிற உரிமைகளுடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்தவும் தனக்குள்ளேயே அல்லது மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான சுதந்திரம் வழங்குகின்றது.

 
பிரிவு 14 (1) (அ) ஆல் அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையின் செயல்பாடுகளும் இன மற்றும் மத நல்லிணக்கத்தின் நலன்களுக்காக அல்லது பாராளுமன்ற சலுகை, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டத்தால் பரிந்துரைக்கப்படக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கும். அவதூறு அல்லது ஒரு குற்றத்திற்கு தூண்டுதல் தொடர்பான சட்டங்களும் இதில் அடங்கியிருக்கும்.

 
அதன்படி, புர்கா ஒரு பாரம்பரிய உடை என்றாலும், இது சில நேரங்களில் சட்டத்தின் சமத்துவப் பண்பு கொள்கையை மீறுவதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, முகத்தினை மூடும் புர்கா ஒரு நபரை அடையாளம் காணுவதைத் தடுக்கலாம். ஒரு குற்றவாளி தனது அடையாளத்தினை மறைக்க புர்காவைப் பயன்படுத்தலாம். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையில் புர்கா தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது. சம்பத் வங்கியின் கிளையில் நடந்த சம்பவம் குறித்த நபரின் ஆள் அடையாளத்தை சரிபார்ப்பது தொடர்பானது. சம்பந்தப்பட்ட பெண் பின்னர் வங்கியின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். இருப்பினும், பலர் அந்நிய இன சமூகங்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவதற்காக இந்த சம்பவத்தை வேறு விதத்தில் கையாண்டனர்.
வெறுக்கத்தக்க பேச்சு பல அர்த்தங்களைக்; கொண்டுள்ளது, மேலும் வெறுப்புணர்வான பேச்சு என்ற சொல் ஐ.நா.வால் பேசுதல், எழுதுதல் அல்லது நடத்தை என்பவற்றில் தகவல் தொடர்புக்கான மொழியில் ஒரு நபர் அல்லது ஒரு குழுவைக் குறிக்கும் வகையில் மோசமான அல்லது பாரபட்சமான மொழியைக் குறிக்கின்றது அல்லது பயன்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் மதம், இனம், தேசியம், இனம், நிறம், வம்சாவளி, பாலினம் அல்லது பிற அடையாள காரணி ஆகியவற்றின் அடிப்படையில் இது நபர்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு செயல் ஆகும்.

 
வெறுக்கத்தக்க பேச்சு ஒரு தனிநபரை அல்லது ஒரு குழுவை குறிவைத்து, பழிவாங்கலின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு நடத்தை ஆகும். இதன் மூலம் சட்டபூர்வமான தன்மையை வளர்க்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக வெறுப்பு அல்லது வன்முறையை உருவாக்குகிறது. வெறுக்கத்தக்க பேச்சின் முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆவோர். வெறுக்கத்தக்க பேச்சு வன்முறை, வன்முறை அற்ற சூழல், ஒரு வலுவான செல்வாக்கு, சமூக ஊடகங்களில் பிரபலமடையும் வெறுக்கத்தக்க பேச்சு, ஒரு நிகழ்வின் பார்வையாளர்கள் மற்றும் அதிகாரத்தை பிறரிடம் தரக்கூடிய ஓரங்கட்டப்பட்ட சமூகம் ஆகியவற்றிற்கு கட்டாயப்படுத்துவதை விதிக்கிறது.

 
எந்தவொரு பன்முக கலாச்சாரம் கொண்ட, பல இன சமூகத்துள்ளும் சமூகங்களிடையேயும் பல கலாச்சார வேறுபாடுகள் காணப்படுபவை இயற்கையானவை. இந்த வேறுபாடுகளை மற்றைய குழுக்கள் தங்கள் அடையாளமாக ஏற்றுக்கொள்ளும் வரை இந்த வேறுபாடுகள் மோதலுக்கு வழிவகுக்காது. இருப்பினும், ஒரு குழு கலாச்சார வேறுபாடுகளை முன்னிலைப்படுத்த முயற்சிக்கும் போது அந்த சமூகம் மீது சந்தேகம் வளரக்கூடும், அது சமூகங்களுக்கிடையே மோதலுக்கு வழிவகுக்கும். அந்த சம்பவங்கள் தொடர்பான வெறுக்கத்தக்க பேச்சின் விளைவாக அலட்சியமாக சிறிய விஷயங்கள் பாரிய மோதல்களைத் தூண்டுவதற்கு பல வெட்கப்படக் கூடிய, கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
பல இன மோதல்களுக்கு காரணம் அரசியல்வாதிகள், வியாபாரத்தின் உச்சத்தில் உள்ள நபர்கள் மற்றும் பொறுப்பற்ற சில ஊடக நபர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக செய்யப்படும் முயற்சிகள் என்பதை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன நல்லிணக்கம் மட்டுமல்ல, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமும் இந்த அடிப்படை புரிதலைப் பொறுத்ததாகக் காணப்படும்.

Leave a Reply