ஹம்பாந்தோட்டையில் யானை- மனித மோதலுக்கு காரணம் என்ன?

அடர்ந்த காடுகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான சட்டவிரோத அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக வாழ்விடங்களை இழந்த யானைகளின் அத்து மீறல் காரணமாக பல பகுதிகளில் பாரிய மனித –யானை மோதல்கள் உருவாகி வருகின்றன.  யானைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று ஹம்பாந்தோட்டை ஆகும்.  உதாரணமாக “வலவ கங்கை” இடது கரை அபிவிருத்தி திட்டம் முன்னைய அரசாங்கத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிகக்ப்பட்டது. இதனால் பல யானைகள் வாழ்விடங்களை இழந்து கிராமங்களுக்குள் வர ஆரம்பித்த விட்டன. இதன் விளைவாக, கடந்த சில வருடங்களாக் ஏராளமான யானைகள் ‘ஹக்க படஸ்’ மற்றும் மின்சார வேலிகளைப் பயன்படுத்தி கொல்லப்பட்டிருப்பதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைகள் கூறுகின்றன. யானைகளின் தக்குதல்களுக்கு உள்ளாகிய பலர் உயிரிழந்திருப்பதோடு காயமடைந்து ஊனமுற்றவர்களாகவும் மாறி உள்ளனர் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.  அடர்ந்த காடுககள் அமைந்துள்ள பிரதேசங்களை சட்டவிரோதமான முறையில் துப்புறவு செய்து காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக வாழ்விடங்களை இழந்த யானைகளின் அத்துமீறல் காரணமாக பல பகுதிகளில் பாரியளவில் மனிதகளுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் உருவாகி வருகின்றன. மேலும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தால் மும்மொழியப்பட்ட காட்டுயானை மேலாண்மை இருப்பு தொடர்பான பாதுகாப்பு முகாமைத்துவம் இல்லாததாலும், வாணிப நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட சுரங்க அகழ்வு, கட்குழி (கருங்கல் உடைத்தல்) போன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மகாவலி திணைக்களத்திற்கு சொந்தமான வன பிரதேசங்களிள் மேற்கொளள்ப்பட்டமை மற்றும் இத்தகைய நோக்கங்களின் அடிப்படையிலான காடழிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட காரணங்களால் இவ்வாறான யானை மற்றும் மனித மோதல்கள் இடம்பெறுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

இவற்றுக்கு மேலதிகமாக ‘குருதானா’ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யானைகள் கடந்து செல்லும் இடங்கள் அமைந்துள்ள பிரதேசங்களை யானைகளுக்கான புதிய வாழ்விடங்களாக மாற்றியமைப்பது அதே போன்று பல்வேறு மக்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு  வழிவகுக்கும் வகையில் தனியான பிரதேசங்களை ஒதுக்கீடு செய்வது போன்ற ஆலோசனைகள் மும்மொழியப் பட்டுள்ளது என சுற்றுச் சூழல் பாதுகாப்பு நம்பிக்கை அமைப்பின் தலைவர் தெரிவித்தார். யானைகளின் இடம் பெயர்வு முறைகளை அடையாளம் காண்பதோடு, ஹம்பாந்தோட்ட பகுதியில் வனப் பகுதிகளை அண்மித்த இடங்களில் மனித – யானை மோதலைக் கட்டுப்படுத் துவதையும் நோக்கமாக கொண்டு, உடவலவ, லுணுகம் வெஹெர மற்றும் பூண்டலா ஆகிய பகுதிகளை ஹம்பாந்தோட்ட காட்டுயானை மேலாண்மை இருப்புக்கான தேசிய பூங்காக்களாக அறிவிக்க வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் முன்மொழியப்பட்டது. இது  ஹம்பாந்தோட்ட பகுதியில் வசிக்கும் சுமார் 450 காட்டுயானைகளில் வாழ்விடங்களை பாதுகாக்கும் என்று வனவிலங்கு துறை தெரிவித்துள்ளது.

மகாவேலி அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள‘ அந்தராவெவ உஸ்கலா’ இல் சுமார் 600 ஏக்கர்களும், ‘வெவேகாம’ இல் 100 ஏக்கர்களும்,‘குடா இடி வேவா’ இல்  400 ஏக்கர்களும், ‘சுருவிருகம முத்தகல் அர’ இல் 25 ஏக்கர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு சட்ட விரோதமாக துப்புறவு செய்யப்பட்டதோடு அங்கு அங்கீகரிக்கப்படாத மின்சார வேலிகள் கூட அமைக்கப்பட்டுள்ளன. காடழிப்பால் யானைகல் அதன் வாழ் விடங்களை இழப்பதாலும் காட்டு யானைகளின் அத்துமீறல் காரணமாகவும், யானை –மனித மோதல்கள் இப்பகுதியில் அதிகரித்துள்ளமை தெளிவாகிறது. சூரியவேவா பிரதேச செயலகத்தில் இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் பொறுப்பான நிறுவனங்கள், பெரிய அளவிலான அங்கீகரிக்கப்படாத விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அகற்றப்படுதல் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என செயலகம் தெரிவித்து வந்திருக்கின்றது. ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மின்சார வேலிகள் அமைப்பதன் மூலம் யானைகளின் வாழ் விடங்கள் தடைபட்டதால், மஹா அந்தராவேவ, வால் சபுகல, கருவல, திஸ்ஸபுர மற்றும் ரணமயுர புர ஆகிய விவசாய பிரதேசங்களுக்கு யானைகளால் ஏற்படும் சேதம் அதிகரித்துள்ளது.

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க திருத்தப்பட்ட தேசிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, 1993 ஜூன் 24 திகதி வெளியான 772/22 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் அபிவிருத்திக்காக 2.5 ஏக்கர் வனப்பகுதியை அகற்றுவதற்கு முன் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) செயல் முறையின் எழுத்து மூல சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலாக்காவின் அனுமதி பெறப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு பெரிய அளவிலான சூரிய சக்தி கிராமம் வால்சபுகல, திவல் பெலெஸ்ஸ ஏரி பகுதியில் கட்டப் பட்டிருந்தது. இது பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அழிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் முன்பு காட்டுயானைகள் பெரிய மந்தைகளாக வசித்து வந்தன என ஹம்பாந்தோட்ட வனவிலங்குகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்துகிறது. மேலதிகமாக, வெவெ கமாவில் பரவி இருக்கும் கொங்கட்டியார காடு, வெலியர, பெடிவேவ, போகஹ இடி வேவா மற்றும் குடா இடி வேவா பகுதிகள் போன்றவை சுமார் 700 ஹெக்டேயர் அளவில் விஸ்தீரனம் உடைய பிரதேசங்கள்  ஆகும். இந்த அடர்ந்த காடுகளில் யானைகள் ஏராளமாக வசித்து வருகின்றன.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தளை விமான நிலையம், சுமார் 2,000 ஹெக்டேயர் காட்டு பிரதேசங்களை உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசமாகும். இதுவரை சுமார் 800 ஹெக்டேயர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட பரந்த வன அமைப்பு மத்தளை பகுதியில் உள்ள யானைகளுக்கு ஒரு பிரதான வனப்பிரதேசமாகும். மேலும், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 1115 ஹெக்டேர் வனப் பிரதேசத்தை உள்ளடக்கியதாக அமைக்கப் பட்டிருப்பதோடு, 700 ஹெக்டேயர் பரப்பளவு அளவிலான காடுகள் அழிக்கப்பட்டு மனித தேவைகளுக்காக அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபம், மிரிஜ்ஜாவில சுதந்திர வர்த்தக வலயம் ஹம்பாந்தோட்டை நிர்வாக மைய்யப் பிரதேசம் மற்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிர்மாணிப்பு, நெடுஞ்சாலை அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த பாரியளவிலான காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விளைவாக, பஹாலா அந்தரா கஸ்வேவ, திமுடுகம, எல்ல, பஹாலமத்தல, உடமத்தல, புஞ்சியப்பு ஜதுர, பந்தகிரியா மற்றும் லுனுகம் வேஹெர திட்ட பகுதிகள் போன்ற வளர்ந்த சிறிய கிராமங்களில் வாழ்விட மாற்ற யானைகளின் நுழைவினால் பெரிய அளவிலான மனித – யானை மோதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாய நிலப் பிரதேசங்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப் படுவதும் சாதாரண விடயமல்ல. இத்தகைய மோசமான நிலைமைகள் காரணமாக விவசாய செய்கைகளில் ஈடுபட்டிருந்த பல விவசாயிகள் அவர்களது விவசாயத்தை கைவிட காரணமாகி விட்டன.

கடந்த 15 வருடங்களில் இதில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக சுமார் 15,000 ஹெக்டேயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் முன்னர் வன விலங்குகள், குறிப்பாக யானைகள் நிறைந்த அடர்ந்தகாடுகள் நிறைந்த பகுதிகளாக இருந்துள்ளன. எனினும், இந்த பகுதிகளில் பெரும்பாலானவை ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் அழிக்கப்பட்டுள்ள அதே நெரம் வன விலங்குகளின் நடமாட்டத்திற்காக சிறிய அளவு காடுகளே எஞ்சியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பிற பகுதிகளிள் வாழும் முறையாக அங்கீகாரம் பெறாத நிலையில் விவசாய முயற்சிகளில் ஈடபட்டு வருகின்ற விவசாயிகள் அவர்களது பெரிய அளவிலான உற்பத்தி காரணமாக தற்போது ஆபத்தை எதிர் நோக்குகின்றனர்.

இத்தகைய பிராந்திய அபிவிருத்தி திட்டங்களினால் காட்டு யானைகளின் வாழ் விடத்தை இழக்கநேரிடும் என்பதால் மனித – யானை மோதல் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். எனவே, இந்த கட்டுரை காட்டுயானைகள் உட்பட அனைத்து உயிர்களின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்யும் அதே வேளை நாட்டின் தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

 

 

Leave a Reply